ஊரடங்கால் பாதிப்பு: இசைக் கருவிகளை வாசித்து அரசிடம் உதவி கோரும் 100 நாட்டுப்புறக் கலைஞர்கள்

நாட்டுப்புறக் கலைஞர்களின் முக்கிய சீசன் காலத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கி போய் உள்ளது.

ஊரடங்கால் பாதிப்பு: இசைக் கருவிகளை வாசித்து அரசிடம் உதவி கோரும் 100 நாட்டுப்புறக் கலைஞர்கள்
ஒரே இடத்தில் இசை வாத்தியங்களை வாசித்த 100 நாட்டுப்புறக் கலைஞர்கள்.
  • Share this:
வாழ்வாதார முடக்கம் காரணமாக கோவில்பட்டியில் ஒரே இடத்தில் 100 நாட்டுப்புறக் கலைஞர்கள் இசை வாத்தியங்களை வாசித்து அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேளம், நாதஸ்வரம், தப்பாட்டம் என ஆயிரத்திற்கு மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதோடு, சுப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாட்டுப்புறக் கலைஞர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டுப்புறக் கலைஞர்களின் முக்கிய சீசன் காலத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கி போய் உள்ளது. மற்ற துறைகளுக்கு அரசு வழங்கும் நிவாரணம் போல தங்களுக்குக் கிடைக்காதது ஏமாற்றம் அளிப்பதாகவும், அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மேலும், ஒருவேளை உணவிற்கே கஷ்டமான சூழ்நிலையில் தங்களின் குடும்பங்கள் இருப்பதாகவும், விழாவிற்கு வாங்கிய அட்வான்ஸ் பணத்தினைத் திரும்பக் கொடுக்கும் நிலை உள்ளதால் அரசு தங்களின் நிலையைக் கருத்தில் கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

இந்நிலையில், கோவில்பட்டி கடலையூர் சாலையில் ஒன்றுதிரண்ட 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்கள் வாத்தியங்களை வாசித்து நூதன முறையில் அரசுக்கு தெரிவித்தனர். அரசு நிச்சயமாக உதவும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see:
First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading