கர்நாடகாவில் 10 மாதக் குழந்தைக்கு கொரோனா தொற்று - பதற்றத்தில் குடும்பத்தினர்

கர்நாடகாவில் 10 மாதக் குழந்தைக்கு கொரோனா தொற்று - பதற்றத்தில் குடும்பத்தினர்
கோப்பு படம்
  • Share this:
கர்நாடகாவில் 10 மாதக் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. அதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகப் பரவிவருகின்றனர். கர்நாடாகவில் இன்று புதிதாக ஏழு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் கர்நாடகாவில் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று புதிதாக கொரோனா பாதித்தவர்களில், தக்ஷன கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாதக் குழந்தையும் அடங்கும். அந்தக் குழந்தை வெளிநாட்டுக்குச் சென்று வந்த பயண அனுபவம் இல்லை. ஆனால், அந்தக் குழந்தையின் குடும்பம் சமீபத்தில் கேரளாவுக்குச் சென்று திரும்பியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த தக்ஷன கன்னடா மாவட்ட ஆட்சியர் சிந்து ரூபேஷ், ‘அந்தக் குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது.


அதனையடுத்து, மார்ச் 23-ம் தேதி மங்களூருவிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அந்தக் குழந்தைக்கு சோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தக் குழந்தை தற்போது நல்ல நிலையில் உள்ளது. அந்தக் குழந்தையின் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்தார். 10 மாதக் குழந்தைக்கு கொரோனா பாதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also see:
First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading