உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க

  Covishield vaccine : மும்பையிலிருந்து 1 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன

  கோவிஷீல்டு தடுப்பூசி

  மும்பையிலிருந்து மேலும் 1 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டன.

  • Share this:
   தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த, பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

   மும்பையில் உள்ள மத்திய மருந்து தொகுப்பு கிடங்கிலிருந்து ஒரு லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இன்று தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியது.

   அந்த தடுப்பூசி மருந்துகளை ஏற்றிக்கொண்டு, ஏர் இந்தியா விமானம் சென்னை விமானநிலையம் வந்தது. 1லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகளை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை பழைய விமானநிலையத்தில் பெற்றுக்கொண்டனா்.

   அதன்பின்பு வாகனத்தில் ஏற்றப்பட்டு சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்தில் உள்ள மருந்து பாதுகாப்பு வைப்பு அறைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இந்த தடுப்பூசி மருந்துகள் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என்று சுகாதாரத்துறையினா் தெரிவித்துள்ளனர்.

   முன்னதாக, ஹைதராபாத்தில் இருந்து 72 ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தது. பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவீஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

   இந்நிலையில், ஹைதராபாத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 6 பார்சல்களில் 165 கிலோ எடைகொண்ட 72, ஆயிரம் டோஸ் கோவக்சின் கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

   இதையடுத்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டன.

   Must Read : கொரோனா தொற்று ... 3 மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு

    

   தமிழகத்தில் நாளை முதல் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க இருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
   Published by:Suresh V
   First published: