ஹோம் /நியூஸ் /கொரோனா /

இந்தியாவில் ஒரேநாளில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா : 1000-ஐ தாண்டிய உயிரிழப்பு

இந்தியாவில் ஒரேநாளில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா : 1000-ஐ தாண்டிய உயிரிழப்பு

கொரோனா

கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,027 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,027 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,84,372 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,38,73,825 ஆக உயர்ந்துள்ளது.

  இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளது. புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தினசரி பாதிப்பு 1.8 லட்சமாக உயர்ந்துள்ளது. அத்துடன், கொரோனாவால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்துள்ளன.

  நேற்று ஒரே நாளில் 1,027 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,72,085 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,23,36,036 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 82,339 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

  நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 13,65,704 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று வரை 11,11,79,578 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

  இந்நிலையில், கொரேனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. அதேசமயம் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

  Must Read :  மகாராஷ்டிராவில் இன்று இரவு முதல் 15 நாட்களுக்கு மக்கள் ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவிப்பு..

  கொரோனா தடுப்பூசி திருவிழா நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது, இந்நிலையில் இன்று, மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பவலலைக் கட்டுப்படுத்துவது குறித்து அலோசனை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Corona spread, CoronaVirus, Covid-19