ஹோம் /நியூஸ் /கொரோனா /

இந்தியாவில் ஒரே நாளில் 1.26 லட்சம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 1.26 லட்சம் பேருக்கு கொரோனா

கொரோனா

கொரோனா

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக, ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலையில், கடந்த 4 வாரங்களாக தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து நாள் தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கொரோனா தொற்று பரவத் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை இல்லாத அளவிற்கு, இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,26,789 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒட்டு மொத்தமாக 1 கோடியே 29,28,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 59, 258 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  சிகிச்சை பலனின்றி மேலும் 685 பேர் உயிரிழந்தனர். 9,10319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 59,907 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் 322 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 9 கோடியே 1 லட்சத்து 98,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க... கிணற்றில் நீச்சல் பயிற்சி அளித்த தந்தை மகனுடன் சேர்ந்து நீரில் மூழ்கி உயிரிழப்பு

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: CoronaVirus, Covid-19