ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

டிடிஎப் வாசன்

டிடிஎப் வாசன்

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது கோவை போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரபல யூ டியூபர், டிடிஎப் வாசன் மீது  மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் Twin throttlers என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்தும், நீண்ட தூரம் பயணித்தும் அதை வீடியோவாக பதிவிட்டு 2k  கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.

  இந்நிலையில் கடந்த 14-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரபல யூ டியூபருமான ஜி.பி.முத்து கோவை வந்திருந்த போது அவரை சந்தித்த டிடிஎப் வாசன், அவரை தனது பைக்கில் அமர வைத்து அதிவேகமாக பைக்கை ஓட்டியுள்ளார்.  ரைடுக்கு கிளம்பும் முன் வாசனின் பைக்கை பார்த்து ஜி.பி.முத்து இதில் பிடிமானம் கூட இல்லையே என தெரிவிக்க, என்னை பிடித்துக் கொள்ளுங்கள் என டிடிஎப் வாசன் கூறுகிறார்.

  கிரிக்கெட் மட்டுமல்ல, எனக்கு சமையல் கலையும் தெரியும் - அசத்தும் சச்சின்!

  அதனைத் தொடர்ந்து 20 கி.மீ. தூரத்தை பைக்கில் செல்ல முடிவு செய்து பயணித்தனர். பின்னர் வாகன நெருக்கடி நிறைந்த சாலைகளில் அதிக வேகத்தில் பயணித்து ஜி.பி.முத்துவுக்கு மரண பயத்தை காட்டினார். ஜி.பி.முத்து ஹெல்மெட் கூட அணியாமல் பின்னால் அமர்ந்து பயணித்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்து டிடிஎப் வாசப் யூ டியுப்பில் பதிவிட்டார்.

  இந்த காட்சிகள் வெளியான நிலையில் கோவை போத்தனூர் போலீசார் டிடிஎப் வாசன் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் டிடிஎப் வாசன் மீது சூலூர் காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிந்தாமணிபுதூர் பகுதியில் பாலக்காடு சாலையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதால் அவர் மீது 3 பிரிவுகளில் சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் என்ற பிரிவிலும், மோட்டார் வாகன சட்டப்படி  ரைடர் ஹெல்மெட் அணியாதது, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய 2 பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Case, Traffic Rules, Youtube