முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / மழை நீரில் செல்லமுடியாமல் தவித்த மாற்றுத்திறனாளி.. உதவிய இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு

மழை நீரில் செல்லமுடியாமல் தவித்த மாற்றுத்திறனாளி.. உதவிய இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு

கோவை மழை தண்ணீரில் மாற்றுத்திறனாளிக்கு உதவிய இளைஞர்கள்

கோவை மழை தண்ணீரில் மாற்றுத்திறனாளிக்கு உதவிய இளைஞர்கள்

Coimbatore | கோவையில் மழை தண்ணீரில்  மூன்று சக்கர வாகனத்துடன் சிரமப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் நேற்று மாலை ஒரு மணி நேரம்  கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கோவை காந்திபுரம் பார்க்கேட் பகுதியில் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் மாற்று திறனாளி ஒருவர் தனது மூன்று சக்கர வாகனத்தை இயக்க முடியாமல் மிகுந்த சிரம்பட்டார்.

அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், மூன்று சக்கர வாகனத்தை இரு புறங்களிலும் உந்தித் தள்ளி அவருக்கு உதவி செய்தனர். இந்த  வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த இளைஞர்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also see... மாவட்ட குழந்தை பாதுகாப்பு அழகில் Data Entry வேலை

இதேபோல் நோயாளியுடன் மருத்துவமனைக்கு விரைந்த ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று மழைநீரில் சிக்கிக்கொண்டது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து ஆம்புல்னஸ் ஓட்டுநருக்கு உதவி செய்தனர். தண்ணீரில் சிக்கி கொண்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை மீட்டு அரசு மருத்துவமனை வரை ஆம்புலன்ஸை தள்ளிக்கொண்டு சென்றனர்.

First published:

Tags: Coimbatore