பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார். இவரது மனைவி கீதா இவர்களுக்கு இரண்டு வயதில் சாய்பிரணவ் என்ற மகன் உள்ளார். கீதா சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி மற்றும் யோகா பயிற்சி செய்து வருகிறார்.
யோகா பயிற்சி மேற்கொள்வதால் உடல் மற்றும் மனம் ஆகியவை ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக பெண்கள் பிரசவத்திற்கு பிறகு யோகா பயிற்சி செய்வதன் மூலம் புத்துணர்ச்சியாக இருக்க முடியும். எனவே அனைவரும் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் ஆங்காங்கே பலரும் யோகா செய்து அசத்தி வருகின்றனர். அதன்படி, 2 மணி நேரம் தண்ணீரில் மிதந்தவாறு பல்வேறு விதமான யோகா ஆசனங்களை செய்து அசத்தியுள்ளார் பொள்ளாச்சியை சேர்ந்த கீதா.
இவர், கடந்த 8 ஆண்டுகளாக யோகா பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் தண்ணீரில் யோகா பயிற்சி செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக இருக்கும் என்றும், உடல் வலி இருக்காது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும், மனம் ஒரு நிலை படுத்தி உடல் ஆரோக்கியமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தண்ணீரில் மிதந்தவாறு யோகா செய்யும் கீதா
அனைத்து மக்களுக்கும் யோகாவின் பயன் சென்றடைய வேண்டும் என்பதற்காக இரண்டு மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகா ஆசனங்கள் செய்து வருவதாகவும், விரைவில் கின்னஸ் சாதனைக்காக 24 மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகா செய்ய பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் கீதா தெரிவித்தார்.
Must Read : அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க கோரிய மனு மீது நாளை விசாரணை
இளம்பெண் கீதாவின் இந்த முயற்சியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர் - ம.சக்திவேல், பொள்ளாச்சி.
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.