ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

பைக்கில் அதிவேக பயணம்: பிரபல யூ டியூபர் டிடிஎப் வாசன் கோவையில் சரண்...

பைக்கில் அதிவேக பயணம்: பிரபல யூ டியூபர் டிடிஎப் வாசன் கோவையில் சரண்...

பிரபல யூ டியூபர் டிடிஎப் வாசன் 

பிரபல யூ டியூபர் டிடிஎப் வாசன் 

Coimbatore | கோவையில் பிரபல யூ டியூபர்  டிடிஎப்  வாசன் மீது இரு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் மதுக்கரை நீதிமன்றத்தில் சரணடைந்து போத்தனூர் வழக்கில் ஜாமீன் பெற்றார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

gகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரபல யூ டியூபர் டிடிஎப் வாசன். இவர் கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல  யூ டியூபர் ஜி.பி.முத்து என்பவரை தனது இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனத்தை இயக்கி அதை  வீடியோ பதிவு செய்து வெளியிட்டார்.

இதனையடுத்து டிடிஎப் வாசன்  மீது போத்தனூர் மற்றும் சூலூர் காவல் நிலையங்களில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இரு வழக்குகளிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் டிடிஎப் வாசன் நேற்று மதுக்கரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

நேற்று காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நீதிமன்ற கூண்டில் டிடிஎப் வாசன் அமர வைக்கப்பட்டிருந்தார். பின்னர் இரண்டு நபர் உத்தரவாதம் அளித்த  பின் நேற்று மாலையில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். போத்தனூர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் டிடிஎப்  வாசன் ஜாமின் பெற்ற நிலையில், சூலூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் ஜாமின் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Also see... மதுரையில் களைக்கட்டும் புத்தகத் திருவிழா..!

இரு சக்கர வாகனத்தில் வேகமாகவும், நீண்ட தொலைவும்  பயணித்து அதை யூ டியூப்பில் வீடியோவாக வெளியிட்டு வரும் டிடிஎப் வாசனுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இருப்பது குறிப்பிடதக்கது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Coimbatore