கோவை நீலம்பூர் பகுதியில் தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் ரோட்டரி மாவட்ட மாநாட்டில் முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். ரோட்டரியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு வெங்கையா நாயுடு பதக்கங்களை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு, “யோகாவிற்கு மதங்கள் கிடையாது, மோடி யோகாவை திணிக்கின்றார் என்கின்றார்கள், யோகா உங்கள் உடலுக்கானது மோடிக்கானதல்ல. துரித உணவுகள் உடலுக்கு ஏற்றதல்ல, ஆரோக்கியமான உணவை எடுத்துகொள்ள வேண்டும் , ஆரோக்கியமான உலகை, ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க உடல் ஆரோக்கியத்தி்ல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தொலைக்காட்சி, இணையதளம் போன்றவை குழந்தைகளின் திறனை பாதிக்கின்றது, சில சமயங்களில் அவர்களை மனரீதியாக பாதிக்கின்றது, தற்கொலைக்கு கூட தூண்டுகின்றது .தாய்மொழி குறித்து பேசுவதால் பிறமொழிகளை படிக்க கூடாதா என்று கேட்கலாம். எந்த மொழியினையும் திணிக்க கூடாது, எந்த மொழியினையும் எதிர்க்கவும் கூடாது.
ஆந்திராவில் இந்தி மொழியை திணிக்க வேண்டாம் ஆனால் டெல்லியில் ஹிந்தி தேவை என உணர்ந்தேன். ஹிந்தியை படிக்க ஆரம்பித்தேன். ஆனால் முதலில் நாம் படிக்க வேண்டுவதும், பேச வேண்டுவதும் தாய் மொழி தான்.தேவைப்படும் மொழியை நாம் கற்றுக் கொள்வது நல்லது,பல மொழிகள் தெரிந்து கொள்வதால் அந்த கலாச்சாரங்களை தெரிந்து கொள்ள முடிகின்றது.
ஆசிரியரை எப்போதும் மறக்க கூடாது என்றும் தெரிவித்தார். 3 வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். நல்ல மருத்துவர்கள், பொறியாளர்கள், நடிகர்கள் என எல்லா தரப்பினரும் இங்கே இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Modi, Tamil News, Venkaiah Naidu, Yoga