Home /News /coimbatore /

யோகாசனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தலைகீழாக இட்லி சாப்பிட்டு அசத்திய யோகா சாமியார்!

யோகாசனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தலைகீழாக இட்லி சாப்பிட்டு அசத்திய யோகா சாமியார்!

யோகா சாமியார்

யோகா சாமியார்

தலைகீழாக யோகாசனம் செய்தபடி இட்லி சாப்பிட்டும் பால், பழம் உள்ளிட்டவற்றை சாப்பிட்டும் கோவிலுக்கு  வந்திருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவையில் யோகாசனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக யோகா சாமியார் ஒருவர், தலைகீழாக யோகாசனம் செய்தபடி இட்லி, பழம், பால் போன்றவற்றை சாப்பிட்டு ஆச்சரியப்படுத்தினார்.

    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் பழனி. யோகாசனம் பயிற்சியாளர் மற்றும் இறைபற்றாளரான இவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள அகஸ்தியர் கோவிலின் முதலாம் ஆண்டு விழாவில் பங்கேற்றார். அப்போது கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மத்தியில் யோகாசனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினார். குறிப்பாக தலைகீழாக யோகாசனம் செய்தபடி இட்லி சாப்பிட்டும் பால், பழம் உள்ளிட்டவற்றை சாப்பிட்டும் கோவிலுக்கு  வந்திருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினார்.

    இதையும் வாசிக்க: கருமாரியம்மன் கோவிலில் தேர் இழுத்த அமைச்சர் நாசர்...

    தலைகீழாக யோகாசனம் செய்த பயிற்சியாளர் பழனிக்கு அவருடன் இருந்த நபர்  இட்லிகளை ஊட்டி விட்டார். மேலும் திராட்சை பழங்களையும் தலைகீழாக நின்றபடி சாப்பிட்ட அவர், டியூப் மூலம் பாலையும் குடித்து ஆச்சரியப்படுத்தினார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Coimbatore, Yoga, Yoga Health Benefits

    அடுத்த செய்தி