ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக பொள்ளாச்சியில் 750 கிலோ ராட்சத கேக்.!

கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக பொள்ளாச்சியில் 750 கிலோ ராட்சத கேக்.!

கிறிஸ்துமஸ் கேக்

கிறிஸ்துமஸ் கேக்

Christmas cake | பொள்ளாச்சியில் தனியார் உணவகத்தில் 13 வகை உலர் பழங்களை கொண்டு 750 கிலோ கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கேக் தயாரிக்கும் பணி நடைபெற்றது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Pollachi, India

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காக 10 நாட்களுக்கு முன்னதாகவே உலர்பழங்கள் மற்றும் பழச்சாறு கொண்டு கிறிஸ்துமஸ் புத்தாண்டு கேக் தயாரிக்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில் பொள்ளாச்சி உடுமலை சாலை ஊஞ்சவளம்பட்டியில் அமைந்துள்ள தனியார் உணவகத்தில் அத்திப்பழம், பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை, பேரிச்சை உள்ளிட்ட13  வகையான உலர் பழங்கள் மற்றும்  உயர்ரக பழச்சாறு கொண்டு கேக் தயாரிக்கும் பணி நடைபெற்றது.

கிறிஸ்மஸ் கேக் தயாரிப்பதற்கு உலர் பழங்கள் மற்றும் பழச்சாறு கலப்பதற்காக வாடிக்கையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதில் கலந்து கொண்ட வாடிக்கையாளர்கள் உலர் பழத்தின் மீது பலசாரை ஊற்றி அனைவரும் கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக  கிறிஸ்மஸ் பாடல் பாடி உலர் பழங்களை கலவை செய்தனர்.

இந்த கலவை 10 நாட்களுக்கு பதப்படுத்தி வைத்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பாக மேலும் சில மாவு சேர்த்து 750 கிலோ பிளம் கேக் தயாரிக்கப்பட உள்ளதாக சமையல் கலைஞர்கள் தெரிவித்தனர்.

Also see... கிறிஸ்துமஸ்-க்காக 200 கிலோ பிளம் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்.. உலர் பழங்கள், மதுவகைகளுடன் ரெடி ஆகுது..

இந்த கேக் தயாரிப்பில் 13 சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர்.

கேக் தயாரிப்பதற்கு முன்பாக ஒவ்வொரு வகை உலர் பழங்கள் பத்து வகையான கேக் மாதிரிகள் மற்றும் உயர்ரக பழச்சாறு காட்சிபடுத்தப்பட்டு அவை ஒவ்வொன்றின் தனித்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

சமையல் கலைஞர்கள் மட்டுமின்றி இதில் பங்கேற்றவர்கள் தங்கள் வீடுகளிலும் இதேபோன்ற கேக்கை தயாரிக்க முடியும் என்றும் அவர்களுக்கு எடுத்துக் கூறினர்.

செய்தியாளர்: ம.சக்திவேல், பொள்ளாச்சி

First published:

Tags: Cake, Christmas, Coimbatore, New Year