Home /News /coimbatore /

தேசிய கொடியில் மத வார்த்தை ... இணையத்தில் வெளியான வீடியோ குறித்து போலீசார் விசாரணை!

தேசிய கொடியில் மத வார்த்தை ... இணையத்தில் வெளியான வீடியோ குறித்து போலீசார் விசாரணை!

இந்திய தேசிய கொடியில் கிறிஸ்தவம்

இந்திய தேசிய கொடியில் கிறிஸ்தவம்

இந்திய தேசியக் கொடியில் கிறிஸ்தவ மத வார்த்தை எழுதப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கோவை சுந்தராபுரம் மாச்சம்பாளையம் பகுதியில் தேசிய கொடியின் கீழ் கிறிஸ்தவ மத வார்த்தை பயன்படுத்தபட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக 13ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரை மூன்று நாட்களில் அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாடுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி நாடு முழுவதும் பல்வேறு வீடுகளில் தேசியக்கொடியானது ஏற்றப்பட்டு இருந்தது.

    15ம் தேதி மாலை அனைவரும் தேசிய கொடியை இறக்கிய நிலையில் கோவை சுந்தராபுரம் பகுதி மாச்சம்பாளையத்தில் சண்முகம் என்பவரது வீட்டில் தேசியக்கொடி இறக்கப்படாமல் பறக்கவிட்டபடி உள்ளது.

    மேலும் தேசிய கொடியின் கீழ் "இயேசுவே என் இந்தியாவை ஆசீர்வதியும்" என்ற வாசகமும் எழுதப்பட்டு தேசிய கொடியானது பறக்கவிடப்பட்டு இருந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை தொடர்ந்து சம்பவ இடத்தில் குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை செய்தியாளர் : ஜெரால்ட்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Coimbatore, National

    அடுத்த செய்தி