ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

திமுக பற்றி பெரியார் சொன்ன இதையும் ஏற்றுக்கொள்வீர்களா? - ஆ.ராசாவிற்கு அண்ணாமலை கேள்வி!

திமுக பற்றி பெரியார் சொன்ன இதையும் ஏற்றுக்கொள்வீர்களா? - ஆ.ராசாவிற்கு அண்ணாமலை கேள்வி!

அண்ணாமலை

அண்ணாமலை

தந்தை பெரியாரின் புத்தகத்தில், ‘ஓட்டுக்காக பொண்டாட்டியை தவிர எல்லாத்தையும் கொடுக்குறான்’ என திமுகவினரை பேசி இருக்கின்றார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலும் நடக்கலாம் எனவும் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல எனவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

கோவையில், மக்களவை உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து  பா.ஜ.க சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின்  மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது ஆ.ராசா பேசிய பேச்சு புதியதல்ல, தீப்பொறி ஆறுமுகம், வெற்றி கொண்டான் ஆகியவர்களும் இதுபோன்று தான் பேசுவார்கள் என கூறினார். திமுகவினர் கடத்த காலங்களில் பேசிய பேச்சுகளை ஊடகங்களில் வர விட மாட்டார்கள் ஆனால் இப்போது சமூக வலைதள காலம், அரசியல் களம் மாறிவிட்டது. மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

தந்தை பெரியாரின் புத்தகத்தில், ‘ஓட்டுக்காக பொண்டாட்டியை தவிர எல்லாத்தையும் கொடுக்குறான்’ என திமுகவினரை பேசி இருக்கின்றார். பெரியாரை ஏற்றுக்கொள்ளும் ஆ.ராசா இதையும் ஏற்றுக்கொள்வாரா என கேள்வி எழுப்பினார்.

காவல்துறையில் பணியாற்றிய போது, 5000 நாட்களில்  2 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்கு போட்டு இருக்கின்றேன் என தெரிவித்த அவர், மத்திய அரசிற்கு தமிழ்நாட்டில் அதிகாரம் இல்லை என நினைக்க கூடாது, அதை இங்கே இருக்கும் தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளும் உணர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

உண்மையில் பாஜகவினர் தான் சுயமரியாதைகாரர்கள் எனவும் பா.ஜ.க விற்கு பொருத்தமான சமூகநீதி, சுயமரியாதை ஆகிய வார்த்தைகளை  திமுகவினர் வெட்டி ஒட்டி வைத்து இருக்கின்றனர் என கூறினார்.

திமுகவினர் பெண் மேயர்களை நிறுத்தி இருக்கின்றனர் ஆனால் அவர்களை திமுக நிர்வாகிகள் அடிமையாக நடத்துகின்றனர் என தெரிவித்தனர். திமுக நிர்வாகிகள் ஆர்.எஸ்.பாரதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், ராஜகண்ணப்பன், பொன்முடி ஆகியவர்கள் மீது திமுக தலைமை  என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பினார்.

இதையும் வாசிக்க: 2024ல் மத்தியில் ஸ்டாலின் மாடல் ஆட்சி அமையும் என நம்புகிறேன் - நியூஸ்18 கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தொடர்ந்து பேசிய அவர், கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, அனைத்திலும் கமிஷன் வாங்குகின்றார் என குற்றம்சாட்டினார்.

தமிழ்நாடு காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது என பேசிய அவர் எங்களின் மீது காவல் துறை கையை வைத்ததற்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, பென்சன் கிடைக்க வில்லை என்றாலோ காவல் துறை ஆடையை ஏன் அணிந்தோம் என கவலைபட்டாலோ நாங்கள் பொறுப்பல்ல என்றும் மிரட்டல் விடுக்கும் தொனியில் தெரிவித்தார்.

மேலும் சனாதன தர்மத்தின் மீது திமுக கையை வைத்து பா.ஜ.கவை ஆட்சி கட்டிலில் அமர வைக்க இருக்கின்றது எனவும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலும் நடந்தால் அதற்கு தாங்கள் பொறுப்பல்ல எனவும் தெரிவித்தார்.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: A Raja, Annamalai, BJP, DMK, Periyar