தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டில் இருந்தால் ஏதாவது இடையூறுகள் இருக்கும் என்பதால் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பார் என திமுக பொதுச்செயலாளரும், நீர்பாசன துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கோவை தனியார் நட்சத்திர ஹோட்டலில் நீர்வளத்துறை சார்பில் கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துச்சாமி, செந்தில் பாலாஜி, சாமிநாதன் ஆகியோரும் ,கீழபவானி பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இருதரப்பைச் சேர்ந்த விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவரிடம் தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்கப்பட்டது. நேற்று காலையும், மாலையும் முதல்வர் வீட்டில் இருப்பவர்களிடம் பேசினேன் என தெரிவித்த அவர், முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அட்மிட் ஆனது குறித்து சிறிது நேரம் முன்புதான் தெரிவித்தார்கள் என கூறினார். வீட்டில் இருந்தால் ஏதாவது இடையூறுகள் இருக்கும் என்பதால் அட்மிட் ஆகியிருப்பார் எனக்கூறிய அவர், முதல்வர் ஸ்டாலின் மூன்று ஊசிகளுமே செலுத்தி இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.
இன்று உலக வங்கியிடம் நிதி பெற்று கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் அமைப்பது தொடர்பாக கலந்துரையாடல் நடத்தப்பட்டது எனவும் விவசாயிகள் இடையே இரு விதமான கருத்துக்கள் இருக்கிறது, ஆதரவாக ஒரு தரப்பும் எதிராக ஒரு தரப்பும் இருக்கின்றனர் என தெரிவித்த அவர், விவசாயிகளிடம் பேசியிருக்கிறோம் அடுத்து ஒரு முறை அமர்ந்து பேசினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதிமுகவை சேர்ந்த முனுசாமிக்கு குவாரி வழங்கப்பட்டதாக பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, பொன்னையன் பைத்தியகாரன் மாதிரி பேசுறார் என தெரிவித்த துரைமுருகன், அதிமுக முனுசாமியின் குவாரிக்கு நாங்கள் ஒரு முறை சீல் வைத்திருக்கின்றோம் எனவும் தெரிவித்தார். போன மாதம் புதியதாக 20 குவாரிகள் டெண்டர் விட்டதில் அதிகபட்ச தொகை செலுத்தி முனுசாமி குவாரி எடுத்திருக்கிறார் என தெரிவித்த அவர், பொன்னையன் முன்பு மாதிரி இல்லை, ஒரு மாதிரி ஆயிட்டார் என தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக திமுக செயல்படுவதாக கூறிப்படுவதில் உண்மை இல்லை எனவும், அரசியல்ல இது மாதிரி சொல்றது வழக்கம்தான் என்று அவர் தெரிவித்தார்.
.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Duraimurugan, MK Stalin