Home /News /coimbatore /

எச்சரிக்கை! இது இந்துக்கள் பகுதி.. மதப்பிரச்சாரத்திற்கு அனுமதி இல்லை - இணையத்தில் வைரலாகும் பேனர்

எச்சரிக்கை! இது இந்துக்கள் பகுதி.. மதப்பிரச்சாரத்திற்கு அனுமதி இல்லை - இணையத்தில் வைரலாகும் பேனர்

எச்சரிக்கை! இது இந்துக்கள் பகுதி.. கோவையில் வைக்கப்பட்ட பேனர்

எச்சரிக்கை! இது இந்துக்கள் பகுதி.. கோவையில் வைக்கப்பட்ட பேனர்

Coimbatore | கிராமத்தின் நுழைவு வாயிலில் இது இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி, இங்கு மதப் பிரச்சாரம் செய்யவும், மத கூட்டங்கள் நடத்தவும் அனுமதியில்லை என பேனர் வைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கோவை மாவட்டம் அன்னூர் அருகே இந்துக்கள் வாழும் பகுதியில் மதப்பிரச்சாரம்,  மதக் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என வைக்கப்பட்டுள்ள பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

    கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் காடுவெட்டி பாளையம் என்ற  கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் நுழைவு வாயிலில் இது இந்துக்கள் மட்டும் வாழும் பகுதி, இங்கு மதப் பிரச்சாரம் செய்யவும், மத கூட்டங்கள் நடத்தவும் அனுமதியில்லை, மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    இணையத்தில் வைரலாகும் பேனர்


    சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் இந்த அறிவிப்பு பலகை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த பேனரில் காவி மற்றும் மஞ்சள் நிறத்தில் நிறத்தில் எச்சரிக்கை என்ற பெரிய எழுத்துக்களுடன் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது இப்படிக்கு காடுவெட்டி பாளையம் ஊர் பொதுமக்கள் என எழுதப்பட்டுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி