Home /News /coimbatore /

எவர்க்ரீன் பவர்புல் ஸ்டார்.. இபிஎஸ் ஆதரவாளர்கள் கோவையில் ஓட்டிய போஸ்டர் வைரல்

எவர்க்ரீன் பவர்புல் ஸ்டார்.. இபிஎஸ் ஆதரவாளர்கள் கோவையில் ஓட்டிய போஸ்டர் வைரல்

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கோவையில் அதிமுகவினர் போஸ்டர்

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கோவையில் அதிமுகவினர் போஸ்டர்

Coimbatore EPS | கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி புகைபடத்துடன்கழகம் காக்க வந்த காவலரே ! தலைமை ஏற்க வா என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தங்கள் ஆதரவை போஸ்டர் ஓட்டுதல் பிரச்சாரம் செய்தல் போன்றவற்றின் மூலமாக வெளிக்காட்டி வருகின்றனர். அந்த வகையில் கோயம்பத்தூரில் ஒரு ஆதரவு போஸ்டர் ஒட்டப்பட்டு வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும் தனித்தனியாக போஸ்டர்களை ஒட்டி ஆதரவினை வெளிப்படுத்தி  வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை நகரில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அம்மன் அர்ஜூனன் பெயரில் நகரின் பல்வேறு இடங்களில்  போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

AlsoRead : அதிமுக பொதுக்குழு தீர்மானம் - இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல்

ஜெயலலிதா,  எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் புகைபடங்களுடன் , எவர்க்ரீன் பவர்புல் ஸ்டார் எஅ இபிஎஸ்-க்கு விளக்கம் கொடுத்து கழகம் காக்க வந்த காவலரே ! தலைமை ஏற்க வா என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்ட்டர்களில் ஓ.பன்னீர்செல்வம் புகைப்படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது. கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன்கழகம் காக்க வந்த காவலரே ! தலைமை ஏற்க வா என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: ADMK, Coimbatore, EPS, OPS

அடுத்த செய்தி