Home /News /coimbatore /

'எங்கள் விநாயகரால் நீர்நிலைகள் மாசு அடையாது' - பாரம்பரிய முறைப்படி சிலை தயாரிக்கும் கோவை இளைஞர்கள்

'எங்கள் விநாயகரால் நீர்நிலைகள் மாசு அடையாது' - பாரம்பரிய முறைப்படி சிலை தயாரிக்கும் கோவை இளைஞர்கள்

விநாயகர் சிலை தயாரிக்கும்  இளைஞர்கள்

விநாயகர் சிலை தயாரிக்கும் இளைஞர்கள்

vinayagar chaturthi : பாரம்பரியமாக விநாயகர் சிலைகளை செய்து அசத்திவரும் கோவை இளைஞர்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாரம்பரியமான குளத்து மண் கொண்டு, இரசாயனமின்றி தண்ணீரில் எளிதாக கரையக்கூடிய விநாயகர் சிலையை தயாரித்து வரும் கோவை இளைஞர்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தவும் அரசு தடை விதித்தது. இதனால் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டது. பெரிய அளவிலான சிலைகளை தயாரிக்கவில்லை. ஒரு அடி முதல் 3 அடி வரையிலான சிலைகள் தயாரிக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் சிலைகள் வைக்க அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி நெருங்கி வருவதால் கோவை மாதம்பட்டி, சுண்டக்கா முத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. புதிய வடிவிலான விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணிகளில் சிலை வடிவமைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சிலைகளை வடிவமைப்பதிலும், விற்பனை செய்வதிலும் ஒரு புறம் வியாபாரிகள் பிசியாக இருக்க கோவை இளைஞர் ஒருவர் எப்படி இரசாயனம் இல்லாத சிலையை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது என சிந்தித்து புதுவித சிலைகளை வடிவமைத்து வருகின்றார். இவரது சிலைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சிலைகளை வழிபாடு நடத்தி முடித்த பின்னர் ஆறு, குளம் என ஏதாவது நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். எனினும் சிலையில் பூசப்படும் செயற்கை இரசாயனம் நீரில் கரையாமல் ஆற்றில் சிலைகள் மிதந்து நீர் நிலைகளை மாசுபடுத்துகின்றன.. இதனால் நீரில் வாழும் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. இதனை கருத்தில் கொண்டு கோவை இளைஞர்கள் மக்களிடம் நீரில் கரையும் சிலைகளை கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    vinayagar chaturthi 2022
    மாசு இல்லாத சிலையை வடிவமைக்கும் இளைஞர்கள்


    இது குறித்து பட்டதாரி இளைஞர்கள் சூர்யா மற்றும் அஜித் தெரிவிக்கையில், 30 வருடங்களுக்கு முன்பாக விநாயகர் சிலையை செய்யும் பக்குவத்தின் அடிப்படையில் தற்போது சிலைகளை செய்து வருகிறோம். பொதுவாக விநாயகர் சிலையை கரைக்கும் போது உடனடியாக கரைந்து அந்த மண்ணில் செடி முளைப்பதற்கான பக்குவம் இருந்தது. அதேபோல தற்போது நாங்களும் குளத்து மண்ணை எடுத்து ஊறவைத்து காயவைத்து குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவாக இருப்பதற்கான உரங்களை அதில் சேர்த்து விநாயகர் சிலையை செய்து வருகிறோம். பொதுவாக குளத்தின் நீரிலோ ஆற்று நீரிலோ விநாயகர் சிலையை கரைக்கும் போது இரசாயன வண்ணங்களை பயன்படுத்துவதால் தண்ணீர் மாசுபடுகிறது. அதனால் மீன்கள் இறக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    vinayagar chaturthi 2022
    இளைஞர் சூர்யா


    ஆனால் கடந்த 30 வருடத்துக்கு முன்பாக தொட்டாங் குச்சியை கரைத்து அதில் வரும் வண்ணங்கள் வைத்தே விநாயகர் சிலைக்கு வண்ணம் செய்தனர். பொதுவாக இரசாயன வண்ணங்கள் அடிக்கும்போது குளத்தின் தன்மை மாறி கெட்டுப்போய் விடுகிறது. இதனால் பாரம்பரியமாக விநாயகர் சிலைகளை செய்து வருவதை பார்த்து கற்றுக் கொண்டு அதன்படியே செய்து வருகிறோம்.

    vinayagar chaturthi 2022
    இளைஞர் அஜித்


    படிக்கும்போதே இந்த தொழிலில் ஆர்வம் வந்ததால் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். அழிந்து வரும் இந்த தொழிலை எப்படி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று படித்து கற்றுக்கொண்டு அதன் மூலம் தற்போது விநாயகர் சிலையை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். தற்போது எங்கள் தொழிற்சாலையில் 30க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். குழந்தைகளைத் கவரும் வகையில் விநாயகர் சிலைகளை செய்து வருகிறோம். அதே போல வீட்டில் பூஜை அறைகளில் 3 நாட்கள் வரை வைத்து பூஜை செய்ய ஏதுவாக குட்டி குட்டி விநாயகர் சிலைகள் , பெரிய சிலைகள் வைக்கப்படும் இடத்தில் துணை சிலைகளாக வைக்கவும் செய்து வருகிறோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    செய்தியாளர் : வைரபெருமாள் அழகுராஜன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி

    அடுத்த செய்தி