Home /News /coimbatore /

கனிமவள கொள்ளையை தட்டிக்கேட்ட பாஜகவினர் கைது.. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? - வானதி சீனிவாசன் ஆவேசம்

கனிமவள கொள்ளையை தட்டிக்கேட்ட பாஜகவினர் கைது.. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? - வானதி சீனிவாசன் ஆவேசம்

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

பாஜகவினர் லாரியின் கண்ணாடியை கல் வீசி தாக்கி உடைத்து நொறுக்கினர். இது தொடர்பாக லாரி உரிமையாளர் அளித்த புகாரின் பேரிலும், வீடியோ காட்சிகள் அடிப்படையிலும் அவர்களை போலிஸார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கனிமவள கொள்ளையை தட்டி கேட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு இருப்பது, தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய மகளிர் அணி  தலைவர் வானதி  சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜமீன்முத்தூரில் இருந்து கடந்த 12 ம் தேதி கருங்கற்களை கேரளாவிற்கு கொண்டு சென்ற லாரிகளை தடுத்து நிறுத்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அவர்கள் லாரியின் கண்ணாடியை கல் வீசி தாக்கி உடைத்து நொறுக்கினர். இது தொடர்பாக லாரி உரிமையாளர் அளித்த புகாரின் பேரிலும், வீடியோ காட்சிகள் அடிப்படையிலும்  பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நகரத் தலைவர் பரமகுரு செந்தில், சபரி ஆகியோர் 13 ம் தேதி கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாஜக தொண்டர்கள் உடைத்த லாரியின் கண்ணாடி


இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிக்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் இருந்து அதிக அளவு கருங்கற்கள் கேரளாவின் திருச்சூருக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், குறைந்த அளவு கருங்கல் எடுத்துச்செல்ல அனுமதி பெற்று விட்டு அதிகமான கற்களை  கொண்டு செல்லவதால், தமிழகத்தின் இயற்கை வளம் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read : ‘எங்கடா அந்த மதுரவாயல்’ என தேடும் வட மாநிலத்தவர்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சட்ட விரோதமாக கொண்டு சென்ற கனிம வளங்களை தட்டிக்கேட்ட பாஜகவினர் மீது காவல்துறை பொய் வழக்கு பதிவு  செய்திருப்பதாகவும், கனிம வள கொள்ளையர்களுக்கு ஆதரவாக காவல்துறை நடந்து கொள்வதுடன் அதை தட்டிக் கேட்டவர்களை கைது செய்திருப்பது,  தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்  வலியுறுத்தியுள்ளார் .
Published by:Raj Kumar
First published:

Tags: BJP cadre arrested, Vanathi srinivasan

அடுத்த செய்தி