Home /News /coimbatore /

திமுகவினர் கள்ள ஓட்டு போட மக்களை ஊக்குவிக்கிறார்கள் - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

திமுகவினர் கள்ள ஓட்டு போட மக்களை ஊக்குவிக்கிறார்கள் - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

Vanathi Srinivasan : மத்திய அரசின் நிதியை கொண்டு தான் தமிழகத்தில் பெரும்பாலான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது இதை மறைத்து திமுக பெயர் பெறுகிறது என்று பாஜக தேசிய மகளிர் அணி செயலாளரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பொள்ளாச்சியில் பேட்டியளிக்கையில் குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட காரச்சேரி கிராமத்தில் பாஜகவில் உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி செயலாளரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் முன்னிலையில் திமுக, அதிமுகவில் இருந்து விலகியவர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் பாஜகவில் இணைந்தனர்.

    பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார். அப்போது, பெண்கள் யாரையும் சார்ந்து இல்லாமல் தங்கள் பணிகளை தாங்களே மேற்கொள்ள அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அம்மா இருசக்கர வாகன திட்டம் பயனுள்ளதாக இருந்தது என்று பாராட்டினார்.

    ஆனால், திமுக ஆட்சி அமைந்தவுடன் இத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு இலவச பேருந்து திட்டத்தை அறிவித்தார்கள். இதனால் தற்போது பேருந்துக்காக பெண்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இலவச பேருந்துகள் பெண்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. தற்போது பெண்களுக்காக பிங்க் கலர் பேருந்து திட்டம் அறிமுக படுத்தியுள்ளனர். அதில் முகப்பில் மட்டும் உதட்டு சாயம் போல் பூசியதாக சமூக வலைதளங்களில் கிண்டல் அடிக்கும் நிலைமை தான் உள்ளது.

    நல்ல பேருந்துகளை வழங்கி பெண்களுக்கு உதவி செய்யாமல் பழைய பேருந்துகளுக்கு வர்ணம் பூசி இந்த திட்டத்தை தொடங்கியுள்ளார்கள். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பெரும்பாலான திட்டங்கள் மத்திய அரசின் நிதியைக் கொண்டுதான் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், பெயர் கொடுப்பது மட்டும் திமுக அரசு என குற்றம் சாட்டினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், ஒரே நபர் மூன்று நான்கு இடங்களில் வாக்களிப்பதை தடுக்கவும் கள்ள ஓட்டுக்கள் போடுவதை தடுக்கவும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் சீர்திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துவருகிறது. இதன் மூலம் ஒரு நபரின் முழுமையான விவரங்கள் அறிய முடியும் அரசின் அனைத்து துறைகளிலும் பயனடைய முடியும்.

    Must Read : மோசடி வழக்கு... விஷம் குடித்த இந்து மக்கள் கட்சி பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    இது வரவேற்கத்தக்க அம்சம் இதை, கட்சி வேறுபாடு இன்றி அனைவரும ஆதரிக்க வேண்டும். இதை திமுக எதிர்ப்பதன் மூலம் அவர்கள் கள்ள ஓட்டுக்கள் போட மக்களை ஊக்குவிக்கின்றார்கள் என்றுதான் அர்த்தம். ஆதார் எண்ணை வங்கிக் கணக்கு முதல் அனைத்து இடங்களிலும் மக்கள் பயன்படுத்தி பழகி விட்டார்கள். இதில் திமுகவிற்கு என்ன சிக்கல்? என்ற கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசன் இதை வேறு விதமாக பயன்படுத்த பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

    செய்தியாளர் - ம.சக்திவேல்‌.
    Published by:Suresh V
    First published:

    Tags: BJP, Coimbatore, Pollachi, Vanathi srinivasan

    அடுத்த செய்தி