முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / பாஜக வளரவேண்டி பாதயாத்திரை செல்லும் வானதி சீனிவாசன்... ”இதயம் கனக்குதே...” அண்ணாமலை உருக்கம்!

பாஜக வளரவேண்டி பாதயாத்திரை செல்லும் வானதி சீனிவாசன்... ”இதயம் கனக்குதே...” அண்ணாமலை உருக்கம்!

அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன்

அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன்

வானதி சீனிவாசன் அதிக உறுதியுள்ள பெண்மணி, கட்சிக்காக 3 நாட்கள் பாதயாத்திரை செல்வது இதயம் கனக்கிறது - அண்ணாமலை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

பாஜக வளர வேண்டும் என வேண்டிக்கொண்டு வானதி சீனிவாசன் தொடங்கிய 3 நாட்கள் பழனி பாதயாத்திரையை மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கிவைத்தார்.

கோவை ஈச்சனாரி விநாயகர் கோயிலில் இருந்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பழனி பாதயாத்திரை சென்றார். இந்த பாத யாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, வானதி சீனிவாசன் அதிக உறுதியுள்ள பெண்மணி எனவும் கட்சிக்காக 3 நாட்கள் பாதயாத்திரை செல்வது இதயம் கனப்பதாகவும் தெரிவித்தார்.

3 கோயில்களை இடித்ததாக டி.ஆர்.பாலு பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டது என நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

First published:

Tags: Annamalai, BJP, Palani Murugan Temple, Vanathi srinivasan