முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் உடல்நலக்குறைவால் காலமானார்

முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் உடல்நலக்குறைவால் காலமானார்

கோவை தங்கம்

கோவை தங்கம்

வால்பாறை தொகுதியில் இரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கோவை தங்கம்.

  • Last Updated :
  • Coimbatore, India

முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தவர் கோவை தங்கம். காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர்  த.மா.க உருவான  போது அதில் இணைந்து பணியாற்றினார்.  வால்பாறை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக 2001 மற்றும் 2006 ஆகிய இரு சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு  வால்பாறை தொகுதியில் இரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கோவை தங்கம்.

சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது வால்பாறை மக்களின் நம்பிக்கைகுரிய நபராக வலம் வந்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் த.மா.க சார்பில் வால்பாறையில்  போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால், அக்கட்சியில் இருந்து  வெளியேறி திமுகவில் இணைந்தார்.

73 வயதான அவர் கடந்த சில தினங்களாக கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் , நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாய்பாபா காலனியில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

வால்பாறை சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம்  மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல். மாற்று கட்சியில் இருந்த போதும், திமுகவில் இணைந்த பின்பும், தன் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்ததாகவும் அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.

top videos

    First published:

    Tags: Coimbatore, Tamil News, Tamilnadu