Home /News /coimbatore /

வாளையாறு அருகே கேரளாவுக்கு “ஸ்பிரிட்” ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து...

வாளையாறு அருகே கேரளாவுக்கு “ஸ்பிரிட்” ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து...

 “ஸ்பிரிட்” ஏற்றி வந்த டேங்கர் லாரி

“ஸ்பிரிட்” ஏற்றி வந்த டேங்கர் லாரி

SPRIT LORRY | கோவை மாவட்டம் வாளையாறு அருகே தேசிய நெடுஞ்சாலையில் கேரளா நோக்கிச் சென்ற “ஸ்பிரிட்” லோடு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில்  லாரியில் இருந்த ஸ்பிரிட் சாலையில் கொட்டியது்.

ஆந்திரா மாநிலத்தில் இருந்து மது உற்பத்திக்கு பயன்படுத்தபடும் “ஸ்பிரிட்” ஏற்றிக்கொண்டு 9 டேங்கர் லாரிகள் கோவை வழியாக கேரளா நோக்கி சென்றுள்ளது. இன்று அதிகாலை 7 டேங்கர் லாரிகள் வாளையாறு பகுதியை  கடந்து சென்றது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் (40) என்பவர் ஓட்டி வந்த 25,000 லிட்டர் ஸ்பிரிட் லோடுடன் வந்த டேங்கர் லாரி வாளையாறு  அருகே வந்தபோது, நெடுஞ்சாலை பராமரிப்பு பணிக்காக வைக்கப்பட்ட மணல் மூட்டைகள் மீது மோதாமல் இருக்க வலது புறத்தில்  வண்டியைத் திரும்பிய  போது பின்னால் வந்த மற்றொரு டேங்கர் லாரி பார்த்திபன் ஓட்டி வந்த டேங்கர் லாரி மீது மோதியது.

இதில் நிலைதடுமாறிய முன்னால் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது. டேங்கர் லாரியில் இருந்து ஸ்பிரிட் கசிந்து சாலையில் ஓடியது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற  தீயணைப்பு துறையினர் தீ விபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் பொக்லைன் மூலம்  கவிழ்ந்த  டேங்கர் லாரி தூக்கி நிறுத்தப்பட்டது.

Also see... திருவாரூர்: போதையில் காவலரின் கழுத்தை அறுத்த இளைஞர் கைது...

இந்த விபத்தில் ஓட்டுநர் பார்த்திபன் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அதிகாலையில் நடந்த இந்த  விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Accident, Kerala

அடுத்த செய்தி