கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் இலக்கிய பொன்விழா மற்றும் பிறந்தநாள் விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து இறுதியாக பேசினார். அப்போது, மொழியை அறிந்தவன், மொழியை சமைக்கின்றவன், மொழியோடு வாழ்ந்தன் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை என தெரிவித்த அவர், மேடையில் இருக்கும் விருந்தினர்களாலே இந்த விழா சிறப்பானது என தெரிவித்தார்.
இந்தியாவின் பொருளாதாரம் கொரொனாவிற்கு பின்பும் சரியாமல் இருப்பதற்கும், இலங்கைக்கு ஏற்பட்ட நிலை இந்தியாவிற்கு வராமல் இருக்கவும் காரணம் ப.சிதம்பரம் என தெரிவித்தார். சிதம்பரத்தின் பேனாவும், நாக்கும் என்ன சொல்கின்றது என்பதை கேட்க இந்திய நாடு காத்திருக்கின்றது என குறிப்பிட்ட அவர், உரையாடல் நீதி என்றால் என்ன என்பதை சிதம்பரத்திடம் கற்று கொண்டேன் எனவும் தெரிவித்தார்.
திறந்த வெளி வாழ்க்கையில் இருந்து வந்த எனக்கு பேராசிரியராக இருப்பவர் ப.சிதம்பரம் எனக்கூறிய அவர், கலைஞர் பொன்விழவிற்கு தலைமை ஏற்பார் என நினைத்த நேரத்தில், அவர் இல்லாத இடத்தை மேடையில் இருப்பவர்கள் நிவர்த்தி செய்து இருக்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.
திமுக பொது செயலாளர் என்ற நீண்ட பாரம்பரியம் கொண்ட பதவியில் அமர்ந்து இருப்பவர் துரைமுருகன் என தெரிவித்த அவர், தன்னை படிக்க வைத்த எம்.ஜி.ஆர்., கட்சி ஆரமித்த பின்னர் துரைமுருகனை அழைத்த போது, நீங்கள் எனக்கு கடவுள் ஆனால் கலைஞர் எனக்கு தலைவர் என்று சொன்னவர் துரைமுருகன் என தெரிவித்தார்.
இந்த விழா சிறப்பாக கொண்டாட்டமாக இருக்க நான் ஒரு கச்சா பொருள் மட்டுமே, நீங்கள்தான் காரணகர்த்தா என சிறப்பு விருந்தினர்களை பாராட்டிய வைரமுத்து, இங்கு யாரையும் தொட்டு பேசுவதில்லை என்பது எனக்கு வருத்தம் எனவும் தெரிவித்தார்.
பொன்னாடையை போர்த்தும் போது முகம் பார்க்காதீர்கள், பிறர் மூச்சு காற்று மேல் பட விடாதீர்கள், முகம் கவசம் அணியுங்கள் என மருத்துவர்கள் ஆலோசனை சொன்னார்கள், ஆனால் உங்கள் முகம் கசங்கி விடும் என்பதற்காக முக கவசம் அணியவில்லை என தெரிவித்த அவர், முகம் பார்க்காமல், தொட்டு பேசாமல் இருக்கும் என்னை மன்னித்து விடுங்கள், கொரொனாவையும் மன்னித்து விடுங்கள் எனவும் தெரிவித்தார்.
பலவேறு காரணங்களால் சிதறி கிடக்கும் நாம் இணையும் ஒரு புள்ளி மொழி எனவும், மொழி என்பது வெறும் கருவியல்ல என்றும் தெரிவித்தார். மொழிதான் நிலத்தின் அடையாளம், மொழி பண்பாட்டு கருவி. சொற்களை பயன்படுத்தும் இடத்தில் பண்பாட்டை படித்து கொண்டு இருக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார். அவமானங்களையும் போராட்டங்களையும் கடந்துதான் இந்த இடத்திற்கு வந்து இருக்கின்றேன் என தெரிவித்த அவர், தற்போது மாணவர்கள் தமிழ்மொழியினை எழுதவும் படிக்கவும் திணறுகின்றனர் என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதற்கு காரணம் பாடதிட்டமா? ஆசிரியர்களா? பள்ளிகூடங்களா? தெரியவில்லை எனக்கூறிய அவர் வைரமுத்து, 50 ஆண்டுகள் இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் பேச்சு மொழியாக மாறிவிடும் சூழ்நிலை இருக்கிறது எனவும் வேதனை தெரிவித்தார். பிறந்தநாளில் இதை கவலையோடும், அச்சத்தோடும் பதிவு செய்கின்றேன் என தெரிவித்த அவர், தமிழில் பேசவும், எழுதவும் வல்லமை கொண்டவர்களாக்க மாற்ற வேண்டும் எனவும் 50 ஆண்டுகளில் பேச்சு மொழியாகும்விபத்தை தடுக்க வேண்டிய இடத்தில் இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
Must Read : நான் ஏற்கனவே பொதுச்செயலாளர் தான்.. அவர்கள் தான் சண்டை போட்டுக்கொள்கிறார்கள் - ஓபிஎஸ், இபிஎஸ் குறித்து சசிகலா
பள்ளிகளில் படித்தல், எழுத்து பயற்சி போன்றவை அளிக்க வேண்டும் என தெரிவித்த அவர், இந்த ஆண்டு மொழிபாடத்தில் 10, 11 ஆம் வகுப்பில் ஆயிரகணக்கானோர் தோல்வி அடைந்து இருக்கின்றனர் என தெரிவித்தார். மொழிப்பாடத்தை மேம்படுத்த கல்வி யுகமும், அறிவு யுகமும் சேர்ந்து பலப்படுத்த வேண்டும் எனவும் கவிஞர் வைரமுத்து வலியுறுத்தினார்.
உங்கள் நகரத்திலிருந்து(கோயம்புத்தூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.