ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

கோர விபத்தில் சிக்கிய குடும்பம்.. 4 பேர் பரிதாப பலி... உடுமலை அருகே சோகம்

கோர விபத்தில் சிக்கிய குடும்பம்.. 4 பேர் பரிதாப பலி... உடுமலை அருகே சோகம்

கோர விபத்தில் சிக்கிய குடும்பம்

கோர விபத்தில் சிக்கிய குடும்பம்

Udumalaipet death | உறவினரின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Udumalaipettai

உடுமலை அருகே சரக்கு வாகனமும் ஆம்னி காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 வயது சிறுமி உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த நரசிங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவர் அதே பகுதியில் வாடகைக்கு ஆம்னி கார் ஓட்டி வருகிறார்.  இந்நிலையில் இன்று அதே பகுதியைச் சேர்ந்த ஆசிபா பானு தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக தனது குடும்பத்தினருடன் வாடகைக்கு முத்துவை அழைத்துக் கொண்டு ஆம்னி காரில் மடத்துக்குளம் பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை நோக்கி காய்கறி ஏற்றி கொண்டு வந்த சரக்கு வாகனமும், ஆம்னி காரும் எதிர்பாராத விதமாக  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஆம்னி காரில் பயணித்த ஓட்டுநர் முத்து (57) ,ஆசிபா பானு(35) ,ரசிதா பேகம்(55),சஸ்மிதா 10 வயது சிறுமி உட்பட நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் பயணம் செய்த இஸ்மாயில் (14) என்ற சிறுவன் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிறுவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் வாகன ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: ம.சக்திவேல், பொள்ளாச்சி.

First published:

Tags: Accident, Death, Local News, Udumalaipet