Home /News /coimbatore /

மதுகுடித்த உடனே உயிரிழந்த இருவர்; சொத்துக்காக மருமகனே விஷம் கலந்த அதிர்ச்சி சம்பவம்

மதுகுடித்த உடனே உயிரிழந்த இருவர்; சொத்துக்காக மருமகனே விஷம் கலந்த அதிர்ச்சி சம்பவம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

போலீசார் வேலுச்சாமியின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் குடும்ப பிரச்சனை மற்றும் சொத்துக்காக அவரது மருமகன் மதுவில் சயனைடு கலந்து  கொடுத்தது தெரிய வந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pollachi, India
    பொள்ளாச்சி அருகே உள்ள பணப்பெட்டி கிராமத்தில் மது அருந்திய இருவர் உயிரிழந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் உறவினர் ஒருவர் மதுவில் சயனைடு கலந்து கொடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பொள்ளாச்சி அடுத்துள்ள நெகமம் பொன்னாக்காணி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (56), விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (58) கூலித்தொழிலாளி, இருவரும் நேற்று நெகமம் அடுத்துள்ள பனப்பட்டியில் இருந்து பொன்னாக்காணி செல்லும் பகுதியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.. அப்போது சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர் இதில் வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. அருகில் இருந்தவர்கள் மனோகரனை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரனும் உயிரிழந்தார்.

    Also Read : தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம் தகவல்

    மது அருந்திய இருவரும் சிறிது நேரத்தில் உயிரிழந்ததால் இருவரும் குடித்தது போலி மதுவா? அல்லது கள்ளச்சாரயமா? என்ற கோணத்தில் நெகமம் போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், திடீர் திருப்பமாக வேலுச்சாமியின் உறவினர், மதுவில் சயனைடு கலந்து கொடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    மேலும் நெகமம் போலீசார் வேலுச்சாமியின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் குடும்ப பிரச்சனை மற்றும் சொத்துக்காக அவரது மருமகன் மதுவில் சயனைடு கலந்து  கொடுத்தது தெரிய வந்துள்ளது.

    இதனை அடுத்து வேலுச்சாமியின் மருமகனை நெகமம் போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பிறகு கொலையின் நோக்கம் முழுமையாக தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

    பொள்ளாச்சி செய்தியாளர் : ம.சக்திவேல்
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Crime News, Murder case, Poison

    அடுத்த செய்தி