ஹோம் /நியூஸ் /Coimbatore /

கோவை விமான நிலையத்தில் தானியங்கி ரோபோக்கள் - பயணிகளுக்கு வழிகாட்ட புதிய ஏற்பாடு

கோவை விமான நிலையத்தில் தானியங்கி ரோபோக்கள் - பயணிகளுக்கு வழிகாட்ட புதிய ஏற்பாடு

ரோபோ

ரோபோ

Coimbatore : கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் தானியங்கி ரோபோக்கள் இன்று அறிமுகப்படுத்தப்படுகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் இரு தானியங்கி ரோபோக்கள் பயன்பாட்டிக்கு கொண்டு வரப்படுகின்றது. இன்று மாலை இதன் அறிமுக நிகழ்வு நடத்தப்பட இருக்கின்றது.

கோவை விமான நிலையத்தில்  இருந்து சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும்,  இந்தியா முழுவதற்கும்  விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஏராளமான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த  விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் தானியங்கி ரோபோக்கள் இன்று அறிமுகப்படுத்தப் படுகிறது.

செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இந்த அதிநவீன ரோபோக்கள் மூலம்  தேவையான தகவல்களை பயணிகள் பெறமுடியும். இன்று அறிமுகப்படுத்தப்படும் இரண்டு அதிநவீன  ரோபோக்ளில் ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்திலும், மற்றொன்று விமான வருகை முனையத்திலும்  வைக்கப்பட இருக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தானாக நகரும் தன்மை கொண்ட இந்த ரோபோக்கள் மூலம்  பயணிகள் உதவி மையத்தை தொடர்பு கொள்ள விரும்பினால், ரோபோ உடனடியாக உதவி மையத்தை தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை அளிக்கும்.

Must Read : நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள் போட்டோஸ்!

விமானத்திற்கு செல்ல வேண்டிய வழி, பாஸ்போர்ட் சரிபார்ப்பு இடம் செல்லும் வழிகளை இந்த ரோபோக்கள்  பயணிகளுக்கு தெரிவிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை இந்த அதி நவீன செயற்கை நுண்ணறிவுதிறன் கொண்ட ரோபோக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருக்கின்றன.

Published by:Suresh V
First published:

Tags: Airport, Coimbatore, Robo