முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / காவல் துறை வாகனத்தில் இருந்த நபரை இழுத்துபோட்டு தாக்கிய திருநங்கைகள்..

காவல் துறை வாகனத்தில் இருந்த நபரை இழுத்துபோட்டு தாக்கிய திருநங்கைகள்..

காவல் துறை வாகனத்தில் இருந்து ஒருவரை இழுத்துப் போட்டு தாக்கும் திருநங்கைகள்...

காவல் துறை வாகனத்தில் இருந்து ஒருவரை இழுத்துப் போட்டு தாக்கும் திருநங்கைகள்...

Coimbatore | கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு திருநங்கைகள் காவல் துறை வாகனத்தில் இருந்து ஒருவரை இழுத்துப் போட்டு தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு திருநங்கைகள் சிலருக்கும்,  பேருந்து நிலையத்தில் நின்றிருந்த நபர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திருநங்கைகள் அந்த நபருடன் தகராறு செய்து கொண்டிருந்த நிலையில் , தகவல் அறிந்து அங்கு வந்த ரோந்து காவல்துறையினர் இரு தரப்பையும் சமரசப்படுத்தினர்.

ஆனால் திருநங்கைகள் அந்த நபரை தாக்கிய நிலையில் அவரை மீட்ட போலீசார் ரோந்து வாகனத்தின் பின்புறம் அமர வைத்தனர். ரோந்து காவல் பணியில் இருந்த காவல்துறையினரின் சமரசத்திற்கு இணங்காத திருநங்கைகள், தொடர்ந்து ஆவேசமாக பேசிய படி காவல்துறை வாகனத்தின் பின்புற கதவை திறந்து, அந்த நபரை இழுத்து போட்டு தாக்கினார்.

Also see... பாலியல் தொழில் போட்டி.. ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

இந்தக் சம்பவத்தை பேருந்து நிலையத்தில் இருந்த பயணி ஒருவர் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் . இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனிடையே திருநங்கைகளால் தாக்கப்பட்ட நபர் காவல்துறையில் புகார் எதுவும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

First published:

Tags: Coimbatore, Police, Transgender