முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கனமழை : வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை : வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

School holiday : தென்மேற்கு பருவமழை காரணமாக பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சமீரான் உத்தரவிட்டுள்ளார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து பரவலாக பெய்து வந்த நிலையில் மீண்டும் இன்று முதல்  2 நாட்களுக்கு கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.

இதனால் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளான வால்பாறை டவுன் ரொட்டிக்கடை, சோலையார் உள்ளிட்ட பல இடங்களில் மேலும் தொடர் மழை பெய்து வருவதால் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பு நலன் கருதி கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.

Must Read : மாற்றுத்திறனாளி இணையருக்கு மக்கள் நடத்திய வளைகாப்பு - ஆரணியில் நெகிழ்ச்சி சம்பவம்

மேலும் வால்பாறை பகுதி சோலையாறு கூளங்கள் ஆறு கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் - ம.சக்திவேல்.

First published:

Tags: Coimbatore, Pollachi, Rain, School Holiday