ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

Coimbatore day : சில்லென்ற கோவையும் சிறுவாணி தண்ணீயும்.. கோவைக்கு இன்று 218வது பிறந்தநாள்.. பெருமையை பேசுவோம்..

Coimbatore day : சில்லென்ற கோவையும் சிறுவாணி தண்ணீயும்.. கோவைக்கு இன்று 218வது பிறந்தநாள்.. பெருமையை பேசுவோம்..

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

Coimbatore day : கோவைக்கு இன்று 218 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கோவையின் அமைதி என்றும் நிலைத்திருக்க வேண்டும் என கோவை வாசிகள் விரும்புகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  தென்னிந்தியாவில் சென்னை, ஹைதராபாத், பெங்களூருக்கு அடுத்த நான்காவது மிகப்பெரிய மாநகரம் கோவை மாநகரம் தான். இது இந்தியாவின் 11வது பெரிய மாநகரமாகவும் உள்ளது. தொழில் வளர்ச்சியிலும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும், மேம்பட்ட நிலையில் உள்ள கோவைக்கு இன்று 218வது பிறந்தநாள்.

  கடந்த 1804 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் நவம்பர் மாதம் 24-ம் தேதி கோவைக்கு மாவட்ட அந்தஸ்து கிடைத்தது.

  அப்போது முதல் ஆண்டுதோறும் நவம்பர் 24ம் தேதி கோவை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுவாணி தண்ணீரும், சில்லென்ற காற்றும், மரியாதையான பேச்சும் கோவையின் அடையாளமாக உள்ளது. கோவையில் வசிக்க வந்த யாரும் மீண்டும் கோவையை விட்டு போக மனம் கொள்ள மாட்டார். அவ்வளவு இனிமையை கொண்ட ஊர் கோவை.

  கோவையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரோமானியர்களுடன் வணிகம் நடைபெற்றுள்ளது. அதற்கான சான்றுகள் நொய்யல் நதிக்கரையோரங்களிலும்,ராஜா கேசரி பெரு வழியிலும் கண்டறியப்பட்டுள்ளன.

  Also see... இமாச்சல பிரதேசத்தில் பயிற்சியை முடித்து திரும்பிய என்எஸ்எஸ் மாணவர்கள்.. கோவையில் உற்சாக வரவேற்பு

  கடந்த நூற்றாண்டில் கோவைவாசிகளின் வாழ்வாதாரமாக பஞ்சாலைகள் விளங்கின. பின்னர் பம்ப், மோட்டார் தொழில்களும், இயந்திர பாகங்களை உற்பத்தி செய்யும் பவுண்டரிகளும் என அதனை சார்ந்து பல்வேறு தொழில்கள் உருவாகின. வெட் கிரைண்டர் கோவையில் தான் முதன் முதலில் உருவாக்கப்பட்டது.

  இப்படி புதிய புதிய தொழில்கள் இணைந்து கோவையை தொழில் நகரமாக உருவெடுக்கச் செய்தன. பல இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகிறது. இன்றளவும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா மற்றும் வடநாட்டைச் சேர்ந்தவர்களும் கோவைக்கு வந்து பொருளாதாரத்தில் உயர்ந்து செல்கின்றனர்.

  Also see...கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமங்கள் என்னென்ன?

  அதேபோல கோவையின் வால்பாறை தேயிலை உற்பத்திலும், பொள்ளாச்சி தென்னை உற்பத்தியிலும், சூலூர், கருமத்தம்பட்டி பகுதிகள் விசைத்தறி தொழிலிலும், புற நகர் பகுதிகள் விவசாயத்திலும் சிறந்து விளங்கி வருகின்றன. பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள கோவை, நாளுக்கு நாள் அபரிவிதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. தொழில் துறையிலும், கல்வி துறையிலும் முன்னணி நகரமாக உருவெடுத்து வரும் கோவையை கொண்டாட வேண்டியது அனைவரின் கடமையாக உள்ளது.

  இந்த நிலையில் இன்று கோவையை கொண்டாடும் வகையில் மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை இணைந்து கோவை விழாவை கொண்டாடி கோவையின் அவசியத்தையும் அமைதியையும் வலியுறுத்துகின்றனர்.தொழில் வளர்ச்சியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் கோவை மென்மேலும் வளர சமூக ஒற்றுமை நிலவ வேண்டும் எனவும் கோவை வாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

  செய்தியாளர்: ஜெரால்ட் , கோவை

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Birthday, Coimbatore, Local News, Tamil News