கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடந்த ஆண்டு காயங்களுடன் 8 மாத குட்டிப்புலி மீட்கப்பட்டது. அதை தனியாக கூண்டில் வைத்து வனத்துறையினர் பராமரித்து வந்தனர். தற்போது ஒன்றரை வயதாகும் அந்த புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஜூன் 5ஆம் தேதி 10,000 சதுர அடி பரப்பளவு கொண்ட பெரிய அளவிலான கூண்டில் புலிக்குட்டி விடப்பட்டது.
அந்த புலிக்குட்டி வேட்டையாட வசதியாக முயல்கள் அந்த கூண்டில் விடப்பட்டது. ஆனால் குட்டியாக இருந்த போதே சிறிய கூண்டில் அடைக்கப்பட்டு இறைச்சி வழங்கப்பட்டு பழக்கப்பட்டு விட்டதால் புலிக்குட்டி, முயல்களை வேட்டையாடவில்லை.
இந்நிலையில் கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் புலிக்குட்டி, முயல்களை வேட்டையாட பழகி இருப்பது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதிபடுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆண் புலிக்குட்டி புதன்கிழமை இரண்டு முயல்களை வேட்டையாடி சாப்பிட்டது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருக்கின்றது.
நேற்றும் புலிக்குட்டி முயல்களை வேட்டையாடி சாப்பிட்டுள்ளது. புலிக்குட்டியின் வேட்டையாடும் முறைகளை தொடர்ந்து கண்காணிக்கவும் அடுத்தகட்டமாக மான், காட்டுப்பன்றிகளை கூண்டில் விட்டு வேட்டையாடவும் பயிற்சி அளிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து இபிஎஸ்-க்கு ஆதரவாக நெல்லையில் போஸ்டர்
எட்டு மாத குட்டியாக காயங்களுடன் மீட்கப்பட்ட போது 80 கிலோவாக இருந்த புலி குட்டி தற்போது ஒன்றரை வயதில் 144 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இருப்பது குறிப்பிடதக்கது.
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.