கோவை கொடிசியா வளாகத்தில் கோயமுத்தூர் 6 வது புத்தக கண்காடசி நடைபெற்று வருகின்றது. புத்தக கண்காட்சியின் 7 வது நாளான இன்று பள்ளி மாணவ, மாணவியர்கள் 5 ஆயிரம் பேர் "திருக்குறள் திரள் வாசிப்பு" நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாநகரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 5000 பேர் கொடிசியா ஹாலில் அமர வைக்கப்பட்டனர். மாணவர்களுக்கு புத்தக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. அந்த புத்தகத்தில் இடம் பெற்று இருந்த திருவள்ளுவர் படம் காவி நிறத்தில் இருந்தது.
திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தில் இருந்தும் 2 குறள்கள் என 20 குறள்களை அனைத்து மாணவ மாணவிகளும் திரளாக வாசித்தனர். திருக்குறள்களை மாணவ, மாணவிகள் ஓரே குரலில் சொல்ல, சொல்ல ஆசிரியர்கள் திருக்குறளுக்கு விளக்கம் அளித்தனர். மாணவர்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கவிக்கும் விதமாக திருக்குறள் திரள் வாசிப்பு நிகழ்ச்சியானது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த திருக்குறள் திரள்வாசிப்பில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தாமதமாக வந்தநிலையில் அவரது வேண்டுகோளுக்கு இணங்க 4 குறள்கள் மட்டும் திரள் வாசிப்பாக மீண்டும் வாசிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சமீரன் திருக்குறள்களை வாசிக்க மாணவர்கள் திரளாக குறள்களை வாசித்தனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “ தினமும் புத்தக திருவிழாவில் சிறப்பான நிகழ்வுகள் நடத்தப்படுகின்றது எனவும்,இன்று திருக்குறள் திரள் வாசிப்பில் 5000 மாணவர்கள் 20 குறள்களை ஒரே குரலில் படித்தார்கள் எனவும், வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக இந்த திருக்குறள் திரள் வாசிப்பு இருக்கும் எனவும் கூறினார்.
மேலும் மாணவர்கள் எல்லாருக்கும் திருக்குறள் புத்தகமும் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தில் திருவள்ளுவர் படம் காவி நிறத்தில் இருப்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அது தவறான கருத்து எனவும், பார்வை குழப்பம் என்று சொல்லாம் என தெரிவித்த அவர், நான் திருக்குறள் புத்தகத்தின் அட்டை நிறத்தை பார்க்கவில்லை, அதன் உள்ளே என்ன இருக்கின்றது என்றுதான் பார்க்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
Also see... இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாணவியியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
மேலும், அட்டுக்கல் விவகாரத்தில் மனித உறுப்புகள் திருடும் கும்பல் தொடர்பு என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு இருப்பது தொடர்பான கேள்விக்கு, அட்டுக்கல் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அழைத்து செல்லப்பட்டது தொடர்பான விவகாரம் விசாரணை நடைபெற்று வருகின்றது எனவும், சமூக நலத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர் எனவும், உரிமை மீறல் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Book Fair, Coimbatore, Thiruvalluvar