மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெறும் கோவை திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான முகவர்கள் மற்றும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று (ஜனவரி 27) கோவை வந்தடைந்தார்.
அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஆன்மீக பூமியான தமிழகத்தில் கோவையில் இருக்கும் தெய்வங்களை வணங்கி உங்களிடம் பேசுகின்றேன் என தனது பேச்சை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், கலாச்சார பெருமை கொண்ட இங்கு வந்து இருப்பது மகிழ்ச்சி. சுதந்திர போராட்டத்திற்கு இங்கு பெரும் பங்களிப்பு இருக்கின்றது.
இந்த கூட்டம் மக்களவை தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் நம்பிக்கையான முன்னேற்றத்தை பார்த்து கொண்டு இருக்கின்றோம் என தெரிவித்தார்.
மேலும் திமுக ஒரு குடும்ப கட்சி. அது பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுகின்றது. வாரிசு அரசியலை மாற்ற வேண்டும் என தெரிவித்த அவர், முதலில் தேசம், பின்னர் கட்சி, கடைசியில் தான் சுயநலம் என பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Coimbatore, J.P.Nadda, JP Nadda, Lok Sabha Election, TN Assembly