Home /News /coimbatore /

யாரு சாமி நீங்க..! - வளைத்து நெளித்து போடப்பட்ட ரோடு - வாயடைத்து போய் நிற்கும் கோவை மக்கள்

யாரு சாமி நீங்க..! - வளைத்து நெளித்து போடப்பட்ட ரோடு - வாயடைத்து போய் நிற்கும் கோவை மக்கள்

சாலையை வளைத்து நெளித்து போட்ட நெடுஞ்சாலைத் துறை...

சாலையை வளைத்து நெளித்து போட்ட நெடுஞ்சாலைத் துறை...

Coimbatore | கோவை கவுண்டம்பாளையம்  பகுதியில் புதிதாக  தார் சாலை போடப்பட்டு வரும் நிலையில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மயான வாகனங்களுக்காக சாலையை வளைத்து நெளித்து போட்டுள்ளனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில்  தற்போது புதிய புதியதாக சாலை போடும் பணிகள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இரவு நேரங்களில் துவங்கி அதிகாலை வரை மட்டுமே பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதில் கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி பகுதியில் தற்போது புதிய சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகின்றது. அப்பகுதியில்  சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்  பழுதடைந்த மின் மயான வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களை அப்புறப்படுத்தாமல் சாலை போடும் பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

Also see... கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து

கோவையில் சாலையை வளைத்து நெளித்து போட்ட நெடுஞ்சாலைத் துறை...


அந்த வாகனங்கள் நிற்கும் பகுதியில், வாகனங்களுக்கு ஏற்றபடி சாலையை வளைத்து நெளித்து சாலையை போட்டுள்ளனர். சாலை பணிகளை மேற்கொள்ளும் முன் அந்த இடங்களில் இருக்கும்  ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலைகளை போடுவதால் அது மக்களுக்கு பயனளிக்கும் விதமாக இருக்காது என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Coimbatore, Highways Department, Road Safety

அடுத்த செய்தி