ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

பின்னால் நின்ற காட்டு யானை... ஆசிரியரின் திக்... திக்... நிமிடங்கள்...

பின்னால் நின்ற காட்டு யானை... ஆசிரியரின் திக்... திக்... நிமிடங்கள்...

காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள்

காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள்

Coimbatore News : கோவை அருகே காட்டு யானையிடம் இருந்து இன்று அதிகாலை ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த வரப்பாளையம், பொன்னூத்து பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. உணவு தேடி வரும் காட்டு யானைகள் இந்த பகுதியில் ஊருக்குள் புகுவது வழக்கம்.

  இந்நிலையில், இன்று அதிகாலை வரப்பாளையம் கிராமத்திற்குள் காட்டு யானைகள் புகுந்ததாக அப்பகுதி விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. யானைகள் ஊருக்குள் புகுந்த தகவல் அறிந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமசாமி தனது தோட்டத்தில் சோளம் பயிரிடப்பட்டிருந்ததால் அதனை பாதுகாக்க மின் வேலி  இணைப்பை ஆன் செய்ய வந்துள்ளார்.

  இதையும் படிங்க : கல்யாணத்துக்கு முன் காதலனுடன் ஓட்டம் பிடித்த மகள்.. பூச்சி மருந்து குடித்து தாய், தந்தை தற்கொலை - கடலூரில் அதிர்ச்சி சம்பவம்

  அப்போது  எதிர்பாராத விதமாக  அங்கு நின்று கொண்டு இருந்த ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று ராமசாமியை தாக்க வந்தது. இதைக்கண்டு சுதாரித்த ராமசாமி யானையிடம் இருந்து தப்பி  ஓடிவந்தார்.

  இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர் பட்டாசு வெடித்து யானையை விரட்டினார். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

  கோவை செய்தியாளர் - குருசாமி

  Published by:Karthi K
  First published:

  Tags: Coimbatore, Elephant