ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

"ஒற்றை ஓநாய் தாக்குதல்" முறையில் கோவை கார் வெடிப்பு சம்பவம்: - தமிழ்நாடு காவல்துறை தகவல்

"ஒற்றை ஓநாய் தாக்குதல்" முறையில் கோவை கார் வெடிப்பு சம்பவம்: - தமிழ்நாடு காவல்துறை தகவல்

கோவை கார் வெடிப்பு

கோவை கார் வெடிப்பு

NIA விசாரணையை தொடங்கும் முன்பே கோவை காவல்துறையினர் முக்கிய தகவல்களை விசாரணை செய்து சேகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் முன்பு நடந்த கார் வெடிப்பு சம்பவம் "ஒற்றை ஓநாய் தாக்குதல்" (Lone wolf attack) முறையை ஒத்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் எதிரில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை நடத்திய விசாரணையில், அந்த காரில் இருந்தவர் பழைய துணிக்கடை வியாபாரியான ஜமோசா முபின் என தெரிய வந்தது.

இதனையடுத்து அவர் வீட்டை சோதனையிட்டபோது, வெடிகுண்டு தயாரிக்க தேவையான 75 கிலோ வெடி பொருட்கள் கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஜமோசா முபீனின் உறவினர்கள் உட்பட 6 பேர் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

தமிழ்நாடு அரசு இந்த வழக்கை என்.ஐ.ஏ.விற்கு மாற்ற பரிந்துரை செய்த நிலையில் தேசிய புலனாய்வு முகமையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

தமிழ்நாடு காவல்துறை நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல், தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் கையாளும் "ஒற்றை ஓநாய் தாக்குதல் முறை" (Lone wolf attack) முறையை ஒத்திருப்பது தெரியவந்துள்ளது.

ஒற்றை ஓநாய் தாக்குதல் என்பது, தீவிரவாத  அமைப்பின் உதவியின்றி  தனியாக சித்தாந்த்திற்காக தாக்குதல் நடத்தும் முறை  ஆகும். இந்த ஒற்றை ஓநாய் தாக்குதல்கள் (IS) இஸ்லாமிய அரசு, அல் கொய்தா ஆகிய அமைப்புகளின்  சித்தாந்தத்தில் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது.

3 டிரம்களில் வெடிமருந்துகளுடன் ஆணி, கோலிகுண்டு உள்ளிட்டவற்றை நிரப்பி காரில் வைத்துக்கொண்டு ஜமீஷா முபீன் காரை கோயில் முன்பாக நிறுத்தி சிலிண்டரில் இருந்து கேசை திறந்து விட்டு தற்கொலை படை தாக்குதல் நடத்தி இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்துள்ளனர்.

கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தி கோவில் முன்பு பெரிய அளவில் பாதிப்பை  உருவாக்க முபீன் நினைத்திருந்த நிலையில், நல்வாய்ப்பாக பெரிய பாதிப்பு இல்லாமல் போயிருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜமோஷா முபீன் தனது நெருங்கிய உறவினர்களாக அசாரூதீன் மற்றும் அப்சர்கான் ஆகியோருடன் கோனியம்மன் கோவில் உட்பட பல கோவில்களை சமீபத்தில் நோட்டமிட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஜமோஷா முபீன் அவரது உறவினர்களான அசாருதீன் மற்றும் அப்சர் கான் ஆகியோர் காந்தி பார்க் பகுதியில் கேஸ் சிலிண்டர்கள் வாங்கியிருப்பதும், பழைய மார்க்கெட் பகுதியில் 3 இரும்பு ட்ரம்களை வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை சேகரிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

NIA விசாரணையை தொடங்கும் முன்பே கோவை காவல்துறையினர் முக்கிய தகவல்களை விசாரணை செய்து சேகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை 

இந்த தாக்குதல் மூலம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை  ஏற்படுத்த திட்டமிட்டு இருந்ததும் இரண்டு கோவில்களின் அருகில் தாக்குதல் நடத்த  திட்டமிட்டு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் பின்னணியில் வெளிநாட்டு தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், NIA விசாரணையில் முழு உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Coimbatore, Terror Attack