முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / ”தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறையை கணிசமாக குறைத்துள்ளோம்...”- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

”தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறையை கணிசமாக குறைத்துள்ளோம்...”- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

நிதியமைச்சர் பேட்டி

நிதியமைச்சர் பேட்டி

Tamil nadu Finance Minister Palanivel Thiagarajan | கல்விக்கடன் தள்ளுபடி, பெண்களுக்கான உரிமை குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட 7 ஆண்டு சரிவை இரண்டே ஆண்டுகளில் திருத்தி இருப்பதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜிடி நாயுடு அரங்கத்தில் எக்ஸ்பிரிமெண்டா என்ற அறிவியல் மையத்தை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்து பேசினார். நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் மூலதன உற்பத்தி, நிர்வாக திறன் போன்றவைகள் தமிழகத்தில் சிறப்பாக உள்ளன.

அறிவியல் ரீதியாகவும் தமிழகம் வளர்ச்சியடைந்து வருகிறது. தமிழக முதல்வரின் நான் முதல்வன் என்கிற மாணவர்களுக்கான திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தொழில்ரீதியான முன்னேற்றம், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, தொழிற்நிறுவனங்களின் தேவைகள் அனைத்தும் நிறைந்த இடம் என கோவைக்கு பல சிறப்புகள் உள்ளன என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக முதல்வர் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கியது, அதை செயல்படுத்துவது தமிழகத்தில் மட்டும் தான் என்றார்.

ஜிஎஸ்டி -ஐ பொறுத்தவரை தமிழகத்திற்கு 4 ஆயிரம் கோடிக்கு மேலாக ஒன்றிய அரசிடமிருந்து நிலுவை தொகை வர வேண்டி உள்ளது. மார்ச் மாதத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியானது 2020- 21க்கான நிதி ஆகும். இது தவிர மேலும் ரூ.3000 கோடிக்கு மேலாக காம்போசிஷன் தொகை வரவேண்டியது உள்ளது என்றார்.

நாங்கள் ஆட்சிக்கு வரும்போது வருவாய் பற்றாக்குறை ரூ.62 ஆயிரம் கோடி இருந்தது. முதலாம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை தற்போது ரூ.46 ஆயிரம் கோடிக்கு குறைத்தோம். அதேபோல நிதி பற்றாக்குறை 76 ஆயிரம் கோடி ஆக குறைத்துள்ளோம். இதனை ஏற்கனவே வெள்ளை அறிக்கையில் காண்பித்துள்ளேன்.

பட்ஜெட்டை பொருத்தவரை முதல்வரின் உத்தரவுபடி திட்டங்கள் அனைத்தும் படிப்படியாக படிப்படியாக நிறைவேற்றப்படும். கல்விக்கடன் தள்ளுபடி, பெண்களுக்கான உரிமை குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார். தமிழகத்தின் 7 வருட சரிவை இரண்டே ஆண்டில் திருத்தி உள்ளோம் என்பதை அறிக்கை தாக்கல் செய்யும்போது தெரியவரும்.

இலவசத்தில் எது நல்லது நல்லதில்லை என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். தனியார் பள்ளிகளிலேயே ஏன் காலை உணவு கொடுப்பதில்லை என என்னிடம் கேட்கின்றனர். இலவசம் கொடுப்பது எப்படி தவறு என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்: ஜெரால்ட் 

First published:

Tags: Coimbatore, Local News