Home /News /coimbatore /

தென்மேற்கு பருவமழை இயல்படை விட 90% அதிகம்.. செப்டம்பர் 3வது வாரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை இயல்படை விட 90% அதிகம்.. செப்டம்பர் 3வது வாரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழை துணை வேந்தர் கீதாலட்சுமி

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழை துணை வேந்தர் கீதாலட்சுமி

Coimbatore | தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை எதிர்பார்க்கபட்டதை விட 90 சதவீதம் அதிகமாக  மழை பெய்து இருப்பதாகவும், செப்டம்பர் 3 வது வாரத்திலும் கன மழை இருக்கும் எனவும் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழை துணை வேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து  கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது தமிழகத்தில் வழக்கமாக பெய்யும் மழையை விட 90 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது எனவும் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்திருந்தாலும் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில்  மழை அளவு குறைவு எனவும் தெரிவித்தார்.

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விட 27 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது என தெரிவித்த அவர், நீலகிரி , கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் வழக்கத்தை விட 50 சதவீதம் அதிகமான மழை பெய்துள்ளது எனவும் தெரிவித்தார். தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்திருப்பது விவசாயத்திற்கு சாதகமான அறிகுறி என தெரிவித்த அவர், நீலகிரி மாவட்டத்தில் 700 மில்லி மீட்டர் மழை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1700 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என தெரிவித்தார்.

மேலும் நல்ல மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது எனவும், தென்மேற்கு பருவமழை விவசாயிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.  கோவை வானிலை மையத்தின் கணிப்புகள் 80 சதவீதம் வரை சரியாக இருக்கும் என்றும் 285 இடங்களில் தானியங்கி வானிலை மைங்கள் வைத்து அதில் இருந்து தகவல் சேகரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

தென் மேற்கு  பருவ மழை தொடரும் என்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கமான மழை சராசரியை எட்டிவிடும் என தெரிவித்தார். மேலும் செப்டம்பர் 3 வது வாரத்தில் பருவ மழை இறுதி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது என்றும்  குறிப்பிட்டார். இதற்காக வேளாண் மண்டலம் வாரியாக வயல்களில் தண்ணீர் தங்க விடக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கின்றோம், 7 மண்டலங்களில் உள்ள விவசாயிகளுக்கும் பல்வேறு  முன்னெச்சரிக்கள் கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை கல்லூரியில் பட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வரும் பத்தாம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்த அவர், 13 இளநிலை பாடபிரிவுகளில் உள்ள 6,500 இடங்களுக்கு  38,505 பேர் விண்ணப்பித்துள்ளனர் எனவும், இது தவிர்த்து பட்டய படிப்புகளான வேளாண்மை, தோட்டக்கலை, பொறியியல்  மற்றும் தமிழ்வழி வேளாண்மை பட்டயபடிப்பு  ஆகிய நான்கு பட்டய படிப்புகளில் மாணவர்கள் சேர இன்று முதல் ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.

Also see... தமிழகத்தில் களைகட்டிய ஓணம் பண்டிகை...

மேலும் இலங்கையில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு  வேளாண்மையில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து சில பரிந்துரைகள் இலங்கை அரசிற்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், வேளாண் குழுவினர் யாரும் அங்கு செல்ல வில்லை எனவும் துணைவேந்தர் கீதா லட்சுமி தெரிவித்தார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Coimbatore, Heavy Rainfall, September

அடுத்த செய்தி