Home /News /coimbatore /

கோவை வேளாண் பல்கலை. மாணவன் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

கோவை வேளாண் பல்கலை. மாணவன் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

மாணவர் தூக்கிட்டு தற்கொலை

மாணவர் தூக்கிட்டு தற்கொலை

Coimbatore | கோவை வேளாண் பல்கலைகழகத்தில் மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பழனி  என்பவரின்  மகன் பிரோதாஸ் குமார் (19). இவர்  கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் பயோடெக் முதலாமாண்டு படித்து வந்தார்.  பிரோதாஸ் குமார் பி.எஸ்.சி வனவியல் (BSC - forest)  படிக்க விருப்பப்பட்ட நிலையில், அந்த துறை கிடைக்காததால் பயோ டெக் படித்து வந்தார். விரும்பிய படிப்பு கிடைக்காத்தால்  மன உலைச்சலில் இருந்த மாணவர் கடந்த 10 ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக கோவை சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கை தமிழக காவல் துறை தலைவர் சிபிசிஐடி போலிசுக்கு மாற்றி உத்திரவிட்டார். கல்வி நிறுவனங்களில் நடைபெறும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலீஸ் விசாரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவாக இருப்பதன் அடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Also see...கொள்ளு தாத்தா முதல் எள்ளு பேரன் வரை... ஐந்து தலைமுறைகளைச் சேர்ந்த 500 பேர் ஓரிடத்தில் சங்கமம்

இது தொடர்பாக கோவை சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர். திருவண்ணாமலையில் மாணவன் வீட்டில் கோவை  சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணையை துவங்கி உள்ளனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: CBCID Police, Coimbatore

அடுத்த செய்தி