Home /News /coimbatore /

பொள்ளாச்சி : ஆழியார் கவி அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை

பொள்ளாச்சி : ஆழியார் கவி அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை

குரங்கு அருவி

குரங்கு அருவி

Pollachi Monkey Falls | பொள்ளாச்சி அடுத்த ஆழியார் குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை என வனத்துறை அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    பொள்ளாச்சி மற்றும் வால்பாறை கவர்க்கல், சக்தி எஸ்டேட் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் வால்பாறை சாலையில் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள குரங்கு அருவி எனப்படும் கவி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கவி அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை வெளியேற்றினர். அத்துடன் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல மற்றும் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

    அருவியில் இருந்து நேரடியாக ஆழியார் அணைக்கு தண்ணீர் செல்வதால் 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணை தற்பொழுது 118 அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு நலன் கருதி 5 மதகுகள் வழியாக வினாடிக்கு 1150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    Also see... கன்னியாகுமரி டூ காஷ்மீர்.. 10,000 கி.மீ விழிப்புணர்வு பயணம் - சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மதுரை மாற்றுத்திறனாளி இளைஞர்

    ஆழியார் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஆழியார், அம்பராம்பாளையம், கோபாலபுரம் மற்றும் ஆத்துப்பொள்ளாச்சி பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: ம.சக்திவேல், பொள்ளாச்சி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Falls, Pollachi

    அடுத்த செய்தி