முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோவை வேளாண் பல்கலைக்கழக விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

கோவை வேளாண் பல்கலைக்கழக விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

மாணவர் தூக்கிட்டு தற்கொலை

மாணவர் தூக்கிட்டு தற்கொலை

Coimbatore district News: கோவை வேளாண் பல்கலைகழகத்தில் பயோ, டெக் முதலாமாண்டு படித்து வந்த  மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பழனி. இவர் அரசு பேருந்து நடத்துநராக பணியாற்றி வருகிறார்.  இவரது மகன் பிரோதாஸ் குமார் (19). கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் பயோடெக் முதலாமாண்டு படித்து வந்தார்.

பிரோதாஸ் குமார் பி.எஸ்.சி வனவியல் (BSC - forest)  படிக்க விருப்பப்பட்ட நிலையில், அந்த துறை கிடைக்காததால் பயோ டெக் படித்து வந்தார். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர், ஏற்கனவே ஒரு முறை வீட்டில் இருந்த போது தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரை பெற்றோர்கள் சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். விடுதியில் தங்கியிருந்த பிரோதாஸ் குமார் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார், மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாணவரின் தற்கொலைக்கு, அவர் விருப்பப்பட்ட துறையில் படிக்க இடம் கிடைக்காதது காரணமா, அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Must Read : ஆட்டோவில் சென்ற பள்ளி மாணவியிடம் சில்மிஷம் - கானா பாடகர் உட்பட இருவர் போக்சோவில் கைது

பல்கலைகழக விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம், அதிர்ச்சியையும், அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - சுரேஷ்


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published:

Tags: Coimbatore, College student, Sucide