ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

குடிப்பழக்கத்தை விடாத தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற மகன்... பொள்ளாச்சியில் பரபரப்பு சம்பவம்

குடிப்பழக்கத்தை விடாத தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற மகன்... பொள்ளாச்சியில் பரபரப்பு சம்பவம்

மாதிரி படம்

மாதிரி படம்

Coimbatore News : பொள்ளாச்சி அருகே மதுபான கடை முன்பு மகன் தந்தையை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

பொள்ளாச்சி அடுத்துள்ள கரப்பாடி பகுதியை சேர்ந்த சிவலிங்கம் மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சிவலிங்கத்தின் மகன் கார்த்தி தனது தந்தை மீது கோபப்பட்டு மதுப்பழக்கத்தை விடுமாறு தந்தையிடம் அடிக்கடி கூறிவந்துள்ளார். ஆனால் சிவலிங்கம் மது குடிக்கும் பழக்கத்தை விடவில்லை.

இந்நிலையில், கார்த்தி பூசாரிபட்டி அரசு மதுபான கடையில் மது அருந்து கொண்டிருந்த தனது தந்தையை சென்று பார்த்துள்ளார். அப்போது தந்தை மற்றும் மகன் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது கார்த்திக் தனது வாகனத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவலிங்கத்தை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க : பாத்ரூமுக்குள் சென்று விளையாடிய ஒன்றரை வயது குழந்தை.. வாளி நீரில் மூழ்கி பரிதாப பலி!

தந்தை உயிரிழந்ததை கண்டு கார்த்திக் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோமங்கலம் காவல் நிலைய போலீசார் மதுபான கடை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் சிவலிங்கத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான கார்த்தியை கோமங்கலம் காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மகனே தந்தையை அறிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : சக்திவேல் - பொள்ளாச்சி

First published:

Tags: Coimbatore, Crime News, Local News