ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

வால்பாறை அருகே மிரட்டும் ஒற்றை காட்டு யானை... சாலக்குடி சாலையில் போக்குவரத்துக்கு தடை

வால்பாறை அருகே மிரட்டும் ஒற்றை காட்டு யானை... சாலக்குடி சாலையில் போக்குவரத்துக்கு தடை

ஒற்றை காட்டு யானை

ஒற்றை காட்டு யானை

பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை அருகே மழுக்கபாறை பகுதியில் கேரளா மாநில அரசு பேருந்தை தந்ததால் குத்தி உடைத்து சேதப்படுத்திய ஒற்றைக் காட்டு யானை - ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினரையும் விரட்டி அடித்தது. அதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Valparai, India

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வன எல்லை பகுதியில் உள்ள தமிழக - கேரளா வனப்பகுதியில் ஒற்றைக் காட்டு யானை கடந்த சில தினங்களாக தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.

மழுக்கபாறை எஸ்டேட் பகுதியில் இருந்து சாலக்குடி பகுதிக்கு செல்லும் வனப்பகுதியில் 10 நாளுக்கு மேலாக ஒற்றைக்காட்டு யானை வாகனங்களை விரட்டியும் வாகனங்களை உடைத்து சேதப்படுத்தியும் வருகிறது.

இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி வால்பாறை வழியாக சாலக்குடி செல்வதற்கு கார் மற்றும் இருசக்கர வாகனம் போன்ற சிறிய வாகனங்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

இந்நிலையில் சாலக்குடியில் இருந்து மழுக்கபாறை எஸ்டேட் பகுதிக்கு வந்த கேரளா அரசு பேருந்தை வால்பாறை கீழ் சோலையாறு பவர் ஹவுஸ் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை சாலையின் குறுக்கே நின்றுஆக்ரோஷமாக துரத்தியது. பின்னர் பேருந்தின் முன்பக்கத்தை பலமாக தந்தத்தால் குத்தி  சேதப்படுத்தியது.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பேருந்தை வழிமறித்து காட்டு யானை அங்கு நின்றது. இதனால் பேருந்து பயணிகள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகினர்.

தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த மழுக்கபாறை வனத்துறையினர் யானையை சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் விரட்ட முயன்ற பொழுது வனத்துறையினரை கண்டு அஞ்சாத ஒற்றை காட்டு யானை அவர்களையும் ஆக்ரோஷமாக துரத்தி விரட்டியது. ஆக்ரோஷமாக இருந்த யானையைக் கண்டு வனத்துறையினர் ஓடி தப்பினர்.

வாகனங்களை வழி மறைத்து தாக்கி துரத்தும் இந்த ஒற்றை காட்டு யானைக்கு மதம் பிடித்துள்ளதாக மழுக்கபாறை வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதனால் சாலகுடி செல்வதற்கு பகல் நேரங்களில் மட்டும் செல்ல வேண்டும் எனவும் மேலும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பெரிய வாகனங்களில் செல்வோர் மிகவும் பாதுகாப்பாக செல்ல வேண்டும் எனவும் மழுக்கபாறை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Also see... தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - வானிலை

தற்பொழுது வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலையில் கடந்த சில தினங்களாக சுற்றி தெரியும் ஒற்றை காட்டு யானை வனத்துறையினரையே விரட்டி தெறிக்க ஓடவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாள்தோறும் அவ்வழியில் பணிக்கு செல்லும் மக்களும் மிகுந்த அச்சத்திலேயே செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

செய்தியாளர்: ம.சக்திவேல், பொள்ளாச்சி

Published by:Vaijayanthi S
First published:

Tags: Coimbatore, Elephant, Local News, Valparai Constituency