Home /News /coimbatore /

திருநங்கைக்கு செக்ஸ் டார்சர் கொடுத்த சமையல் மாஸ்டர் அடித்துக்கொலை - கோவையில் அதிர்ச்சி

திருநங்கைக்கு செக்ஸ் டார்சர் கொடுத்த சமையல் மாஸ்டர் அடித்துக்கொலை - கோவையில் அதிர்ச்சி

திருநங்கைகள்

திருநங்கைகள்

Crime: கோவையில் சமையல் மாஸ்டர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவத்தில் திருநங்கைகள் தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.

    கோவை துடியலூர் அருகே பாலியல் உறவிற்காக திருநங்கைகளிடம்  சென்ற நபர் அவர்களிடம் மோசமாக நடந்து கொண்டதால் அவரை திருநங்கைகள் அடித்து கொன்றனர். 

    கோவை  மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூர் அருகே  இரவு நேரங்களில் சாலையோரங்களில் நின்று கொண்டு திருநங்கைகள் பாலியல் தொழிலுக்கு அழைப்பது வழக்கம். இதைக் கட்டுப்படுத்த துடியலூர் காவல்துறை பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டும் பலன் அளிக்கவில்லை. இந்நிலையில்  கடந்த 8ம் தேதி இரவு துடியலூரில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையலராக  வேலை செய்து வரும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்த  தர்மலிங்கம் மற்றும் பிரவீன் ஆகியோர் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற போது திருநங்கைகளை பார்த்துள்ளனர். அதில் ரேஸ்மிகா என்ற திருநங்கையிடம் பாலியல் இச்சைகாக இருவரும்  சென்றுள்ளனர்.

    ரேஸ்மிகாவிடம் தர்மலிங்கம்  மூர்க்கத்தனமாக நடந்து கொண்டு , உடலின் பல பாகங்களில் கடித்து  துன்புறுத்தியதாக கூறப்படுகின்றது. இதனால்  திருநங்கை ரேஸ்மிகா கத்தி கூச்சல் போட்ட நிலையில் அருகில் இருந்த மற்ற திருநங்கைகள்  அங்கு வந்து தர்மலிங்கம் மற்றும் பிரவீன் ஆகியோரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பிரவீன் அங்கிருந்து ஓடிவிட, தர்மலிங்கத்தை ரத்தக் காயம் ஏற்படும் அளவிற்கு கடுமையாக தாக்கிவிட்டு திருநங்கைகள் அங்கிருந்து சென்றனர்.

    இந்த தாக்குதலில் படுகாயமடைந்த தர்மலிங்கம் , திருநங்கைகளிடம் அடிவாங்கியதை சொல்லாமல்  இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விழுந்து விட்டதாக கூறி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இது கறித்து மருத்துவமனையில் இருந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் , போலீசார்  தர்மலிங்கத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது திருநங்கைகள் தாக்கியது குறித்து போலீசாரிடம் தர்மலிங்கம் தெரிவித்துள்ளார்.

    Also Read: சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து, லீசுக்கு விட்டு ₹20 கோடி அபேஸ்.. ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது 154 பேர் புகார்

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 9-ம் தேதி தர்மலிங்கம் உயிரிழந்தார். சந்தேக மரணம் என்ற பிரிவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் தர்மலிங்கம் உடலில் தலை, கைகள், வயிற்றின் உட்புறம் ஏற்பட்ட இரத்த கசிவு போன்ற காயங்கள் விபத்தால் ஏற்பட்டது கிடையாது என்றும் கடுமையாக  தாக்கியதால் ஏற்பட்டது என்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றிய துடியலூர் போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு திருநங்கைகள் ரேஷ்மிகா என்கிற மணிகண்டன்,  கௌதமி என்கிற ராஜகோபால்,  மம்தா என்கிற புரோதர், ஹரினிதா, ரூபி என்கிற ரூபன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் இந்த தாக்குதலில் தொடர்புடைய மேலும் சில திருநங்கைகளை துடியலூர் போலீசார் தேடி வருகின்றனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Sex, Sexual abuse, Sexually harassing, Transgender

    அடுத்த செய்தி