ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

காசி தமிழ் சங்கமம் : கோவையில் இருந்து இன்று புறப்பட்ட இரண்டாவது ரயில்!

காசி தமிழ் சங்கமம் : கோவையில் இருந்து இன்று புறப்பட்ட இரண்டாவது ரயில்!

காசி - ரயில்

காசி - ரயில்

முதற்கட்ட பயணத்தில் மாணவர்கள் குழுக்களாக பங்கேற்று இருந்த நிலையில், இந்த ரயிலில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மத்திய ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ரயில் இன்று அதிகாலை சென்றது.

காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம் மற்றும் கலாச்சார தொடர்பை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு துவங்கியுள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான இரண்டாம் கட்ட ரயில் சேவை கோயம்புத்தூரில் இருந்து இன்று அதிகாலை 4.40 மணிக்கு தொடங்கியது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 83 பயணிகள் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் ரயிலில் தங்களது பயணத்தை துவங்கினர்.

முதற்கட்ட பயணத்தில் மாணவர்கள் குழுக்களாக பங்கேற்று இருந்த நிலையில், இந்த ரயிலில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிங்க : ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளை கோயம்புத்தூர் மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், மலர் தூவியும் உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர்.

காசி தமிழ்ச் சங்கமம் ரயில் சேவை கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று அதிகாலை துவங்கப்பட்டதையடுத்து ரயில்வே மற்றும் மாநகர காவல்துறையினர் 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

செய்தியாளர் ஆரோக்கிய ஜெரால்டு ( கோவை) 

Published by:Lakshmanan G
First published:

Tags: Coimbatore