தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், வகுப்பறைக்கு வந்த மாணவர்களுக்கு இனிப்பு வழங்கியும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் பள்ளி நிர்வாகங்கள் வரவேற்றன.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்குப் பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இன்று முதல் வழக்கமான கல்விப் பணியை துவங்கின.
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவ, மாணவியருக்கு இன்று முதல் வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில், மாணவர்களுக்கு முதல் ஒரு வாரம் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படும் என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனை அருகே ஓரே வளாகத்தில் இயங்கும் செயின்ட் ஜோசப், செயின்ட் மேரீஸ், செயின்ட் பிரான்சிஸ் ஆகிய 3 பள்ளிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவிகள் கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிக்கு வந்தனர்.
கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தங்களது நண்பர்களைப் பார்த்துக் கொள்வதும், புதிய வகுப்புகளுக்கு செல்வதும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருப்பதாக மாணவிகள் தெரிவித்தனர்.
Must Read : திருப்பதியில் அமைச்சர் ரோஜாவின் கார் ஓட்டுநர், பாதுகாவலர் தடுத்து நிறுத்தம்
பள்ளிக்கு மாணவர்கள் வந்த நிலையில், முதல் நாள் வழிபாடு நிகழ்வில் பரதநாட்டியம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதை சக மாணவிகள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். பின்னர் வகுப்பறைகளுக்கு சென்ற 5ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு சாக்லேட் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.