ஹோம் /நியூஸ் /கோயம்புத்தூர் /

பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடையை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்.. சமூக வலைதளத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ..!

பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடையை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்.. சமூக வலைதளத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ..!

பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடையை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்

பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடையை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்

கோவையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர் கருணாகரன் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சாக்கடைக்குள் இறங்கி கழிவுகள் அகற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கோவை ஆவாராம்பாளையம் பகுதியில் பாதுகாப்பு உபகரணங்களின்றி தூய்மை பணியாளர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

  துப்புரவு பணியாளர்கள் கையால் மலம் அள்ளும் நிலையும், எந்த உபகரணங்களும் இன்றி பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் அவலமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் துப்புரவு தொழிலாளர்கள் கையால் மலம் அள்ளுவதை தடுக்கும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டு மறுவாழ்வு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை இந்த சட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

  பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடைகளை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் வீடியோக்களும் அடிக்கடி சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.

  இந்த நிலையில் கோவை மாநகராட்சியின்  வடக்கு மண்டலத்திற்கு  உட்பட்ட  ஆவாரம்பாளையம் ஸ்ரீ வள்ளி நகரில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர் கருணாகரன் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சாக்கடைக்குள் இறங்கி கழிவுகள் அகற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.

  Read More : ’வெளிநாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலை’ - வேலை தேடுபவர்களை குறிவைத்து ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் கைது..!

  மேற்பார்வையாளரின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு உபகரணகரணங்கள் இன்றி தூய்மை பணியில் ஈடுபடுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

  செய்தியாளர் : ஆரோக்கிய ஜெரால்டு

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Coimbatore