Home /News /coimbatore /

துடியலூர் அருகே இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட ஆணின் கை மீட்பு

துடியலூர் அருகே இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட ஆணின் கை மீட்பு

வெட்டப்பட்ட கை குப்பையில் இருந்ததை பார்த்து தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி

வெட்டப்பட்ட கை குப்பையில் இருந்ததை பார்த்து தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி

Coimbatore | கோவை துடியலூர் அருகே வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் குப்பைத் தொட்டியில் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட  ஆணின் இடது கை மீட்கப்பட்டது. துடியலூர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த வெள்ளக்கிணர் பிரிவு வி.கே.எல் நகர் பகுதியில் இன்று காலை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வாகனம் மூலம் குப்பைத்தொட்டியில் இருந்து குப்பைகளை அகற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது பிளாஸ்டிக் பையில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் இரண்டு துண்டுகளாக ஆணின் கை கிடந்துள்ளது . இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் உடனடியாக துடியலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு கோவை மாவட்டகாவல் கண்காணிப்பாளர் பத்ரிநாத் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். இரண்டு துண்டுகளாகக் கிடந்த அந்தக் கையை ஆய்வு செய்த போது அது 45 வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கை என்பது தெரிய வந்தது. கைரேகை நிபுணர்கள், மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also see... பள்ளி மாணவர்களுக்கான உணவு திட்டங்கள் என்னென்ன?

மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களையும் போலீசார்  ஆய்வு செய்து வருகின்றனர். கோவையில் உள்ள  காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வரும் போலீசார், வேறு இடங்களில் உள்ள குப்பை தொட்டிகளில்  உடலின் மற்ற பாகங்கள் ஏதேனும் வீசப்பட்டுள்ளனவா என்பதையும் தேடி வருகின்றனர். இரண்டு துண்டு கைகள் மட்டும் கிடைத்து இருப்பது வெள்ளகிணறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Coimbatore, Crime News, Hands

அடுத்த செய்தி