கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Sales man) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கோயம்பத்தூர் மாவட்ட கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பம் https://www.drbcbe.in/ என்ற இணையதளம் வழியாக 14/11/2022 அன்று பிற்பகல் 5.45 மணி வரை Online மூலம் மட்டுமே பெறப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் : 8600 - 29,000 வரை (பதவிக்கு ஏற்றார் போல)
மொத்த காலி இடங்கள்:
விற்பனையாளர் : 153
கட்டுநர் : 80
தகுதிகள் :
வயது : 01/07/2022 அன்றுவரை 18 வயதை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். வயது உச்ச வரம்பு வகுப்பிற்கு தகுந்தாற் போல மாறும்.
Also Read : வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறீர்களா.. இந்த அறிவிப்பு உங்களுக்கு தான்..
கல்வி தகுதி :
விற்பனையாளர் : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி தேர்ச்சி.
கட்டுநர் : பத்தாம் வகுப்பு தேர்ச்சி
மொழி திறன் : விண்ணப்பதாரர் தமிழ் எழுத படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் வேலை அறிவிப்பு - உங்க மாவட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது?
நிபந்தனை : நியமனத்தின்போது அரசு பணியாளர்கள் தேர்வுக்குப் பின்பற்றப்படும் வகுப்பு சுழற்சி முறை ஒட்டு மொத்த நியமனத்திற்கும் பின்பற்றப்படும்.
மேலும் விவரங்களுக்கு : https://www.drbcbe.in/ என்ற இணையதளத்தில் காணலாம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Job search, Jobs, Ration Shop