கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற கைத்தறி பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பரிசு பெற்றனர். இதில் பாஜக தேசிய மகளிர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சினிவாசனும், காயத்ரி ரகுராமும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், இறந்து போன காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தியின் நடைபயணத்தின் மூலம் உயிரோட்ட முடியுமா என்று முயற்சி செய்து பார்க்கிறார்கள். சமீப காலமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தேசிய சிந்தனையால் ஈர்க்கப்பட்டு மோடியின் செயல்பாடுகளால் அவர்கள் பாஜகவிற்க்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். ஆகவே கட்சியை மீட்க ராகுல் காந்தி இந்த பலபரீட்சையில் ஈடுபட்டிருக்கிறார்.
Also Read : அர்ஜூன் சம்பத் கைது ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கை - எச்.ராஜா
காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல். ராகுல் காந்தி நடந்தாலும் சரி, ஓடிபோனாலும் சரி, மாரத்தான் செய்தாலும் சரி அது எந்த பயனையும் தராது. ராகுல் காந்தியின் இந்த நடைபயணம் அவரது உடல் நலத்திற்க்கு நல்லதாக இருக்கலாம். நாட்டிற்க்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு போதும் பயணில்லை.
வார்த்தை மோதல் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும், பொது மேடையிலே அவர்களின் தலைவர்களை வைத்து கொண்டு அநாகரிகமாக பேசும் கலச்சாரத்தை கொண்டு வந்தவர்கள்.
Read Also : இந்து கோவில் குடமுழுக்கு விழாவுக்கு சீர்கொண்டு வந்த இஸ்லாமியர்கள்
மேலும் கோவையில் இருவர் அமரும் கழிப்பறையை கட்டியது தொடர்பான கேள்விக்கு, மாடல் மாடல் என்று சொல்கிறார்கள். இது தான் இந்த திராவிட புதுமாடல். கழிப்பறை கட்டுவதில் கூட திராவிட மாடல் என்று மக்கள் பேசட்டும். இந்த கழிப்பறை சம்பந்தமாக மாநகராட்சி ஆணையரிடம் விளக்கம் கேட்க உள்ளோம்.
இதையெல்லாம் பார்க்கும் போது இந்த அரசாங்கம், மக்களை பற்றி கவலைபடாமல் தங்களது காண்ராக்டர்களை பற்றி கவலை படுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த நிகழ்வுகளில் கிருஷ்ணா கல்வி குழுமத்தின் தலைவர் மலர்விழி மற்றும் பாஜக பொறுப்பாளர்கள், மாணவ மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Congress, RahulGandhi, Vanathi srinivasan